பகிர்ந்து
 
Comments

ஜெர்மன் பிரதமர் டாக்டர் ஏஞ்சலா மெர்கல்லுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைப்பேசியில் பேசினார்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் மற்றும் பிராந்திய அளவில், உலகளவில் இதன் தாக்கங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை, சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் உடனடி முன்னுரிமை அளிப்பதுடன், அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். 

கொவிட்-19 தடுப்பூசியில் ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம், எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு மேம்பாடு, வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வளர்ப்பது உட்பட இரு தரப்பு கொள்கை விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் குறித்த ‘காப்-26’ (COP-26) கூட்டம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கடல்சார் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பதில் இந்தியாவின் முயற்சி போன்ற பல தரப்பு விஷயங்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அனைத்தும் உள்ளடக்கிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில், இரு தரப்புக்கும் இடையிலான முன்னோக்குகளின் பொதுவான தன்மையை அவர்கள் வலியுறுத்தினர்.

 

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
21 Exclusive Photos of PM Modi from 2021
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
Budget Expectations | 75% businesses positive on economic growth, expansion, finds Deloitte survey

Media Coverage

Budget Expectations | 75% businesses positive on economic growth, expansion, finds Deloitte survey
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பகிர்ந்து
 
Comments

PM Modi addressed the World Economic Forum's Davos Agenda via video conferencing. PM Modi said, "The entrepreneurship spirit that Indians have, the ability to adopt new technology, can give new energy to each of our global partners. That's why this is the best time to invest in India."