எனது நண்பரும், செஷல்ஸ் குடியரசின் அதிபருமான மேதகு டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி அவர்களின் அழைப்பின் பேரில், செஷல்ஸின் தேசிய தினப் பொன்விழாக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதற்காக, 2026 ஜூன் 27 முதல் 29 வரை செஷல்ஸுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறேன்.

செஷல்ஸ், ஒரு மதிப்புமிக்க கடல்சார் அண்டை நாடாகவும், நமது மகாசாகர் தொலைநோக்குப் பார்வை மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளுக்கான  பகிரப்பட்ட அர்ப்பணிப்பில் ஒரு முக்கியப் பங்காளராகவும் விளங்குகிறது. இந்த ஆண்டு, பரஸ்பர நம்பிக்கை, பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள், பன்முகத்தன்மைக்கான மரியாதை மற்றும்  மக்களுக்கு இடையேயான எங்கள் ஆழ்ந்த பிணைப்பு ஆகியவற்றில் வேரூன்றிய எங்களது தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவையும்  கொண்டாடுகிறோம்.

2026 பிப்ரவரியில் அதிபர் டாக்டர் ஹெர்மினி மேற்கொண்ட வெற்றிகரமான இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து, எங்களது நீடித்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும்  கலந்துரையாடல்களை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஒன்றிணைந்து, எங்கள் மக்களின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் செழிப்பையும் மேம்படுத்தவும் நாங்கள் பாடுபடுவோம்.

இந்தப் பயணத்தின் போது, செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை நான் பெறுவேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு, நமது இரு நாடுகளையும் இணைக்கும் வலுவான ஜனநாயக மாண்புகளையும் நாடாளுமன்ற மரபுகளையும் பிரதிபலிக்கிறது.

பல தலைமுறைகளாக இந்தியாவுக்கும் செஷல்ஸுக்கும் இடையே உள்ள சிறப்பு நட்பைப் பேணி, எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஓர் வாழும் பாலமாகச் சேவையாற்றி வரும், செஷல்ஸில் உள்ள துடிப்பான இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடுவதையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

எனது இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும், பாதுகாப்பான, அமைதியான மற்றும் செழிப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் என்ற நமது பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
E-Samudra: India’s digital push to reshape maritime governance

Media Coverage

E-Samudra: India’s digital push to reshape maritime governance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 11, 2026
August 11, 2026

Champions on the Podium, Capital Unlocked, Digital Seas Opened: New India’s Winning Streak Under PM Modi