பிரதமர் திரு. நரேந்திர மோடி கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் நகரங்களுக்கு நாளை (ஜனவரி 15, 2019) பயணம் மேற்கொள்கிறார்.

கொல்லத்தில் பிரதமர் கொல்லம் புறவழிச் சாலை என்.எச்.-66ஐ திறந்து வைக்கிறார். இது 13 கிமீ நீளம் கொண்ட இருவழிப்பாதையாகும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 352 கோடி. 1540 மீட்டர் நீளமுடைய அஷ்டமுடி ஏரி மேல் செல்லும் 3 முக்கிய பாலங்களும் இதில் அடங்கும். இத்திட்டம் ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரம் இடையேயான பயண நேரத்தை குறைத்து, கொல்லம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.

திருவனந்தபுரத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பத்மநாபசாமி கோவிலுக்கு செல்வார். பார்வையாளர்கள் வசதிக்கான சில திட்டங்களை தொடங்கும் வகையில் பிரதமர் அதற்கான கல்வெட்டை திறந்துவைப்பார்.

பிரதமர், கொல்லத்திற்கு மேற்கொள்ளும் மூன்றாவது அரசு முறை பயணம் இது. இந்த நகரத்திற்கு முதல் முறையாக பிரதமர் 2015 டிசம்பரில் பயணம் மேற்கொண்டார், அப்போது ஆர். சங்கர் உருவ சிலையை திறந்துவைத்தார். பின்பு 2016 ஏப்ரலில் ஏற்பட்ட தீவிபத்திற்கு பிறகு கொல்லத்திற்கு வந்தார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India accelerates ‘semiconductor drive’ with Rs 1.64 lakh crore investment plan

Media Coverage

India accelerates ‘semiconductor drive’ with Rs 1.64 lakh crore investment plan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 29, 2026
June 29, 2026

PM Modi Advancing National Strength Through Unity, Innovation and Janbhagidari