டென்மார்க் பிரதமர் திருமிகு மெட்டே ஃபிரெடெரிக்சன் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
வர்த்தகம், முதலீடு, புத்தாக்கம், எரிசக்தி, நீர் மேலாண்மை, உணவு பதப்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இந்திய-டென்மார்க் பசுமை உத்திசார் கூட்டுமுயற்சியை வலுப்படுத்தும் உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலுக்கு தலைமை வகிக்கும் டென்மார்க்கின் பதவிக்காலம் வெற்றி பெறவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக சேர்க்கப்பட்டதற்கும் பிரதமர் திரு மோடி தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
பிராந்திய மற்றும் உலகளவில் முக்கியத்துவம் பெறும் விஷயங்கள் குறித்தும் இரு நாடுகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு ஏற்படவும், அங்கு அமைதி மற்றும் இயல்பு நிலை விரைவாக திரும்பவும் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
இருதரப்பிற்கும் பயனளிக்கும் இந்திய- ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வருவதற்கான வலிமையான ஆதரவை வழங்குவதாக டென்மார்க் பிரதமர் திருமிகு ஃபிரெடெரிக்சன் குறிப்பிட்டார். அதேபோல 2026-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த உச்சிமாநாடு வெற்றி பெறவும் ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்தார்.
Had a very good conversation with Prime Minister Mette Frederiksen of Denmark today. We reaffirmed our strong commitment to strengthening our Green Strategic Partnership and to an early conclusion of the India-EU Free Trade Agreement. Conveyed best wishes for Denmark’s Presidency…
— Narendra Modi (@narendramodi) September 16, 2025


