பகிர்ந்து
 
Comments

எனது அருமை நண்பர்கள் அதிபர் ஸீ அவர்களே, அதிபர் புட்டின் அவர்களே,

 

மூன்று நாடுகளைச் சேர்ந்த நாம், கடந்த ஆண்டு அர்ஜென்டினாவில் மாநாடு அளவிலான சந்திப்பை நடத்தினோம். 

 

உலகின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பயனுள்ள வகையில் கருத்துப் பரிமாற்றம் செய்த பிறகு, எதிர்காலத்தில் மீண்டும் சந்திப்பது என நாம் முடிவு செய்தோம். 

 

இன்று நடைபெறும் இந்த RIC (ரஷ்யா-இந்தியா-சீனா) மாநாட்டிற்கு உங்களை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

பொருளாதாரத்தில் உலகின் முன்னணி நாடுகள் என்ற முறையில், பொருளாதாரம், அரசியல் மற்றும் உலக அளவிலான பாதுகாப்பு நிலைமை குறித்து, நமக்கிடையே கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.  இன்று (28.06.2019) நடைபெறும் இந்த முத்தரப்பு சந்திப்பும், உலகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் ஒருங்கிணைந்து செயல்படவும் பயனுள்ளதாக இருக்கும்.  இந்த ஆண்டு பிப்ரவரியில் சீனாவில் நடைபெற்ற நமது வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின் போதும், பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. 

பயங்கரவாத எதிர்ப்பு, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகள், பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தம், பருவநிலை மாற்றம் மற்றும் ரஷ்யா-இந்தியா-சீனா இடையேயான ஒத்துழைப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
21 Exclusive Photos of PM Modi from 2021
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
Kevin Pietersen Applauds PM Modi As Rhino Poaching In Assam Drops To Lowest Under BJP Rule

Media Coverage

Kevin Pietersen Applauds PM Modi As Rhino Poaching In Assam Drops To Lowest Under BJP Rule
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சோம்நாத்தில் புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் 21 ஜனவரி அன்று திறந்து வைக்கிறார்
January 20, 2022
பகிர்ந்து
 
Comments

சோம்நாத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் திரு.நரேந்திர மோடி 21 ஜனவரி 2022 அன்று காலை 11 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவை தொடர்ந்து பிரதமரின் உரை இடம் பெறும்.

சோம்நாத் கோயிலுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு தற்போதுள்ள சுற்றுலா மாளிகை, கோயிலிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் புதிய மாளிகை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதையடுத்து சோம்நாத் கோயிலுக்கு அருகிலேயே ரூ.30 கோடிக்கும் மேற்பட்ட செலவில் புதிய சுற்றுலா மாளிகை கட்டப்பட்டுள்ளது. சொகுசு அறைகள், முக்கியப் பிரமுகர்களுக்கான அறைகள், டீலக்ஸ் அறைகள், மாநாட்டு கூடம், கலையரங்கம் உள்ளிட்ட உயர்தர வசதிகளுடன் இந்த புதிய மாளிகை கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மாளிகையின் எந்த அறையிலிருந்து பார்த்தாலும் கடற்கரை தெரியும் வகையில் இந்த மாளிகையின் நிலப்பரப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது