சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு கண்ணியம், அணுகல், வாய்ப்புக்கான உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். படைப்பாற்றல், உறுதிப்பாடு ஆகியவற்றால் பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதனால் நமது நாட்டின் வளர்ச்சி மகத்துவமிக்க வகையில் மேம்பட்டுள்ளதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். உதவி தொழில்நுட்பங்களில் புதிய கண்டுபிடிப்புகள், உள்ளடக்கிய கல்விக் கொள்கைகள், அணுகக்கூடிய உள்கட்டமைப்பு, சட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் நலனையொட்டி, பல ஆண்டுகளாக இந்தியா முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். எதிர் வரும் காலங்களில் நாங்கள் இதை தொடர்ந்து அதிகரிக்கச் செய்வோம் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு கண்ணியம், அணுகல், வாய்ப்புக்கான நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். படைப்பாற்றல், உறுதிப்பாடு போன்ற பல்வேறு துறைகளில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடைய படைப்பாற்றல், உறுதிப்பாடு ஆகியவற்றிற்கு நன்றி. அதே தருணத்தில் அவர்கள் நமது நாட்டின் வளர்ச்சியை மகத்துவமிக்க வகையில் மேம்படுத்தியுள்ளனர். உதவி தொழில்நுட்பங்களில் புதிய கண்டுபிடிப்புகள், உள்ளடக்கிய கல்விக் கொள்கைகள், அணுகக்கூடிய உள்கட்டமைப்பு, சட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் நலனையொட்டி, பல ஆண்டுகளாக இந்தியா முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எதிர் வரும் காலங்களில் நாங்கள் இதை தொடர்ந்து அதிகரிக்கச் செய்வோம்.
On the International Day of Persons with Disabilities, we reiterate our commitment to always ensuring dignity, access and opportunity for our Divyang sisters and brothers. They have distinguished themselves across sectors, thanks to their creativity and determination. At the same…
— Narendra Modi (@narendramodi) December 3, 2025


