டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் செயல்மிக்க வீரராகவும், அரசியல் சாசன சபைக்கு தலைமை வகித்தவராகவும் இருந்தது முதல் நமது நாட்டின் முதலாவது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றது வரை இணையற்ற கண்ணியம், அர்ப்பணிப்பு மற்றும் தெளிவான நோக்கத்துடன் அவர் நமது நாட்டிற்கு சேவையாற்றியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். அவரது நீண்ட கால பொது வாழ்க்கை எளிமை, துணிச்சல் மற்றும் நாட்டின் ஒற்றுமைக்கான அர்ப்பணிப்புடன் இருந்தது என்றும் அவரது சிறப்பான சேவை மற்றும் தொலைநோக்குப் பார்வை எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்திய சுதந்திர போராட்டத்தில் செயல்மிக்க வீரராகவும், அரசியல் சாசன சபைக்கு தலைமை வகித்தவராகவும் இருந்தது முதல் நமது நாட்டின் முதலாவது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றது வரை இணையற்ற கண்ணியம், அர்ப்பணிப்பு மற்றும் தெளிவான நோக்கத்துடன் அவர் நமது நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார். அவரது நீண்ட கால பொது வாழ்க்கை எளிமை, துணிச்சல் மற்றும் நாட்டின் ஒற்றுமைக்கான அர்ப்பணிப்புடன் இருந்தது. அவரது சிறப்பான சேவை மற்றும் தொலைநோக்குப் பார்வை எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”
Tributes to Dr. Rajendra Prasad Ji on his birth anniversary. From being an active participant in India’s freedom struggle, presiding over the Constituent Assembly to becoming our first President, he served our nation with unmatched dignity, dedication and clarity of purpose. His… pic.twitter.com/oeOdtiZOVP
— Narendra Modi (@narendramodi) December 3, 2025




