பிரதமர் ரூ.6,800 கோடி மதிப்பிலான பல்வேறுத் திட்டங்களைப் தொடங்கியும், அடிக்கல் நாட்டியும், நாட்டிற்கு அர்ப்பணித்தும் வைக்கிறார்
வீடு, சாலை, வேளாண்மை, தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் , சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைசார்ந்தத் திட்டங்கள் இதில் அடங்கும்
வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழாக் கொண்டாட்டத்திலும், ஷில்லாங்கில் நடைபெறும் அதிகாரபூர்வக் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கிறார்
பிரதமர் வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். 1972ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி இந்த கவுன்சில் முறைப்படி தொடங்கப்பட்டது.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, டிசம்பர் 18ம் தேதி மேகாலயா மற்றும் திரிபுராவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஷில்லாங்கில், நடைபெறும் வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். காலை சுமார் 10.30 மணியளவில், ஷில்லாங்கில், மாநில கன்வென்சன் மைய அரங்கத்தில்  நடைபெறும்  வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு, 11.30  மணியளவில் ஷில்லாங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு  வளர்ச்சித்திட்டப் பணிகளைக் தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைப்பதுடன், நிறைவடைந்த பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.  அங்கிருந்நு அகர்தாலாவிற்கு பயணம் செய்யும் அவர், பிற்பகல் 2.45 மணிக்கு, பொதுக்கூட்டத்தில் பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார்.

மேகாலயாவில் பிரதமர்

பிரதமர் வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். 1972ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி இந்த கவுன்சில் முறைப்படி தொடங்கப்பட்டது.  வடகிழக்கு மாநிலங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வடகிழக்கு கவுன்சில்,  முக்கியப் பங்காற்றியிருப்பதுடன்,   அந்த மாநிலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கும், வளர்ச்சித்திட்டங்களுக்கும் அடித்தளம் அமைத்துக்கொடுத்திருக்கிறது. குறிப்பாக கல்வி, சுகாதாரம், விளையாட்டு, நீர்வளம், வேளாண்மை, சுற்றுலா மற்றும் தொழிற்துறைகளுக்கு இடையே நிலவிய மோசமான இடைவெளியைக் களைந்து,  சமூக உள்கட்டமைப்பு வசதிகளுக்கு வித்திட்டது.  

 பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும்  பிரதமர், ரூ.2,450 கோடி மதிப்பிலானப் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்தப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். 

தொலைத்தொடர்பு சேவை மற்றும் இணைப்பை, மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், பிரமதர்  4ஜி செல்போன் கோபுரத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். உம்சாளியில் ஷில்லாங் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் புதியக் கட்டடத்தையும் அவர் திறந்து வைக்கிறார். புதிய ஷில்லாங் சேட்டிலைட் டவுன்ஷிப்பிற்கும், டிகாங்கெஸ்ட் ஷில்லாங்கையும் இணைக்கும் ஷில்லாங்-டெங்க்பசோஷ்  சாலைத் திட்டத்தையும் அவர்  தொடங்கி வைக்கிறார். மேகாலயா , மணிப்பூர் மற்றும் அருணாலச் பிரதேசங்களை  இணைக்கும், 4  இதர சாலைத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 

காளான் ஸ்பான் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில் முனைவோருக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கவும், உதவும் வகையில், மேகாலயாவின் காளான் மேம்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்பான் ஆய்வகத்தை அவர் திறந்து வைக்கிறார்.  இதேபோல்,   தேனீ வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதுவாக, மேகாலயாவில் தேனீ வளர்ப்பு மேம்பாட்டு மையத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.  மிசோரம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அசாமில் அமைக்கப்பட்டுள்ள 21 இந்தி நூலகங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

அஸாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மற்றும் திரிபுரா மாநிலங்களில்   அமைக்கப்பட உள்ள 6 சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஷில்லாங் தொழில்நுட்ப பூங்காவின் 2ம் கட்டப் பணிகளுக்கும், துராவில்  ஒருங்கிணைந்த மருத்துவமனை  மற்றும் கன்வென்சன் மையத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். 

திரிபுராவில் பிரதமர்

பிரதமர் ரூ.4,350 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்தப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். அனைவருக்கும்  சொந்த வீடு  என்பதை உறுதி செய்யும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை உள்ளிட்டக்கிய, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்   (கிராமம் மற்றும் நகர்புறம்) திட்டத்தி கீழ் ரூ.3,400 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கிரகப் பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  இந்தத் திட்டம் 2 லட்சம்  பயனாளிகளுக்கு பலன் அளிக்கும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சாலை இணைப்பை மேம்படுத்தும் விதமாக, அகர்தலா புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிஎம்ஜிஎஸ்ஒய் IIIன் கீழ் 32 சாலைகளுக்கு  அவர் அடிக்கல் நாட்டுகிறார். 

 

ஆனந்த் நகரில்  அமைக்கப்பட்டுள்ள  மாநில அரசின் உணவக மேலாண்மை நிறுவனம் மற்றும் அகர்தலாவில் அமைக்கப்பட்டுள்ள அரசு பல் மருத்துவமனைக் கல்லூரியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India will contribute 1 million dollars for UNESCO World Heritage Center: PM Modi

Media Coverage

India will contribute 1 million dollars for UNESCO World Heritage Center: PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Assam meets Prime Minister
July 22, 2024

The Chief Minister of Assam, Shri Himanta Biswa Sarma met Prime Minister, Shri Narendra Modi today in New Delhi.

The Prime Minister’s Office posted on X;

“Chief Minister of Assam, Shri @himantabiswa, met Prime Minister @narendramodi.”