பகிர்ந்து
 
Comments
ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சிக்கபல்லபூரில் பிரதமர் திறந்து வைக்கிறார்
ஒயிட்ஃபீல்டு (கடுகோடி) முதல் கிருஷ்ணராஜபுர வரையிலான பெங்களூரு மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் தொடங்கிவைக்கிறார்
இந்த மெட்ரோ வழித்தடம் நகரின் போக்குவரத்தை மேலும் எளிதாக்குவதுடன் நெரிசலைக் குறைக்கும்

பிரதமர் திரு நரேந்திர மோடி 2023 மார்ச் 25-ந் தேதி கர்நாடகா செல்கிறார். அன்று காலை 10.45 மணியளவில் சிக்கபல்லபூரில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணியளவில் ஒயிட்ஃபீல்டு (கடுகோடி) முதல் கிருஷ்ணராஜபுர வரையிலான பெங்களூரு மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் தொடங்கிவைப்பதுடன்,  மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிக்கபல்லபூரில் பிரதமர்

மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த உதவும் முன் முயற்சியாகவும், இப்பகுதி மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நடவடிக்கையாகவும் பிரதமர் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்துவைக்கவுள்ளார். இந்த நிறுவனம், சிக்கபல்லபூரின் முட்டெனஹள்ளியில் சத்யசாய் கிராமத்தில் ஸ்ரீ சத்ய சாய் உயர்திறன் பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. ஊரகப்பகுதியில் அமைந்துள்ள இந்நிறுவனம் மருத்துவக்கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வணிகமயமாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்கும் தொலைநோக்குப் பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மருத்துவக்கல்வி மற்றும் தரமான மருத்துவ வசதிகளை கட்டணமின்றி வழங்கவுள்ளது. இந்த நிறுவனம் 2023-ம் கல்வி ஆண்டில் இருந்து செயல்பட தொடங்கும்.

பெங்களூருவில் பிரதமர்

நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் உலகத்தரத்தில் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக பெங்களூரு மெட்ரோ திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ் ஒயிட்ஃபீல்டு (கடுகோடி) முதல் கிருஷ்ணராஜபுரம் வரையில் அமைக்கப்பட்டுள்ள 13.71 கி.மீ. நீள வழித்தடத்தை பிரதமர் ஒயிட்ஃபீல்டு(கடுகோடி) மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடங்கிவைக்கிறார். ரூ.4,250 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம் பெங்களூரு நகர பயணிகளுக்கு பாதுகாப்பான, விரைவான மற்றும் வசதியான பயணத்தை ஏற்படுத்தும் என்பதுடன், பயணத்தை எளிதாக்கி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.

 

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
Symbol Of Confident, 21st Century India

Media Coverage

Symbol Of Confident, 21st Century India
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM congratulates Recep Tayyip Erdogan on re-election as the President of Türkiye
May 29, 2023
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has congratulated Recep Tayyip Erdogan on re-election as the President of Türkiye.

In a tweet, the Prime Minister said;

"Congratulations @RTErdogan on re-election as the President of Türkiye! I am confident that our bilateral ties and cooperation on global issues will continue to grow in the coming times."