ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 1-ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக ரூ. 125 மதிப்பிலான நினைவு நாணயத்தை வெளியிட்டு, நிகழ்ச்சியில் உரையாற்றவிருக்கிறார்.

ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களைப் பற்றி:

‘ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்று பெரும்பாலும் அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) சுவாமி அவர்கள் நிறுவினார். ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் இதர இலக்கிய நூல்களை 89 மொழிகளில் இஸ்கான் அமைப்பு மொழிபெயர்த்து, வேத இலக்கிய நூல்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.

சுவாமி அவர்கள் சுமார் 100 ஆலயங்களை நிறுவி, உலகிற்கு பக்தி யோகாவின் பாதையை எடுத்துரைக்கும் ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

மத்திய கலாச்சார அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Indian economy navigated well external uncertainties: RBI Bulletin

Media Coverage

Indian economy navigated well external uncertainties: RBI Bulletin
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 23, 2026
July 23, 2026

Digital Rails, PLI Jobs & Swift Justice: How PM Modi’s Governance is Rewiring India’s Future