பகிர்ந்து
 
Comments
பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் மற்றும் 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சோதனை அமைப்பை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
இதன் வாயிலாக புத்தாக்கம், செயல்திறன் கட்டமைப்பு, வேகமான தொழில்நுட்பம் போன்றவற்றை இந்தியாவில் ஏற்படுத்த முடியும்
'கால் பிஃபோர் யு டிக்' என்ற செயலியையும், பிரதமர் தொடங்கி வைக்கிறார்
இந்த செயலியின் மூலம் பிரதமரின் கதிசக்தியின் கீழ் ‘அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறை’ குறித்து விளக்கம்
அத்தியாவசிய சேவைகளில் குறைந்த அளவிலான இடையூறு மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைத்து, வர்த்தகத்தில் ஏற்படக் கூடிய நஷ்டங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ளும்

சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் பகுதி அலுவலகம் & இந்தியாவில் உள்ள புத்தாக்க மையத்தை விக்யான் பவனில் 22 மார்ச், 2023 மதியம் 12.30-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் மற்றும் 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சோதனை அமைப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 'கால் பிஃபோர் யு டிக்' என்ற செயலியையும், பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.

சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு என்பது ஐநா-வின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தமான தொழில்நுட்பங்களுக்கான சிறப்பு முகமையாகும். இதன் தலைமையகம் ஜெனிவா-வில் உள்ளது. மேலும் இதற்கு கள அலுவலகங்கள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்கள் உண்டு. சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்போடு கடந்த மார்ச் 2022-ல் கையெழுத்தான உடன்படிக்கையின் கீழ் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் பகுதி அலுவலகம் திறக்கப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மேரோலி-யில் மத்திய டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையக்கட்டிடத்தில் 2-வது தளத்தில் புதிதாக திறக்கப்பட உள்ள சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு அமைய உள்ளது. இதன் மூலம் இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவுகள், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு சேவையாற்றுவதோடு, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் மேம்பாடு அடைவது மற்றும் அந்தந்த பகுதியில் பொருளாதார கூட்டு நடவடிக்கைகளின் மூலம் பயனடைய முடியும்.

கடந்த 2021 நவம்பர்-ல் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கல்வி சார்ந்த குழுக்கள், தர நிர்ணய அமைப்புகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்கள் மற்றும் தொழில்துறையினர் ஆகியோர் இணைந்து  6ஜி தொழில்நுட்ப புத்தாக்கக்குழு அமைக்கப்பட்டது. இதன் முக்கிய பணியானது இந்தியாவில் 6ஜி சேவை தொடர்பாக செயல்திட்டங்களை உருவாக்குவதாகும். அதன் மூலம் பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆவணத்தின் மூலம் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், குறு, சிறு நடுத்தரதொழில் நிறுவனங்கள் போன்றவைகளுக்கு சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பின் மூலம் 6ஜி சேவை சோதனை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

பிரதமரின் கதிசக்தித் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு இணைப்பு திட்டங்களில் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒன்றிணைந்த செயல்முறைகள் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மதிப்புமிக்க கண்ணாடி இழைக்கேபிள் போன்ற முக்கியமானவைகள் சேதமாவதை தடுக்கும் பொருட்டு, 'கால் பிஃபோர் யு டிக்' இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் இல்லாத காரணத்தினால் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் விளைவாக நம் நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.3,000 கோடி இழப்பீடு ஏற்படுகிறது.  புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செயலி மூலம் குழி தோண்டுபவர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் ஆகியோருக்கு எஸ்எம்எஸ்/இமெயில் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படுவதன் விளைவாக திட்டமிட்ட நடவடிக்கைகள் ஏற்பட்டு நிலத்திற்கு கீழே உள்ள முக்கிய பொருட்கள் சேதமடையாமல் காப்பாற்றப்படும்.

'கால் பிஃபோர் யு டிக்' இந்த செயலி மூலம் ‘அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறை’ செயல்பாட்டின் விளைவாக அனைத்து துறை சார்ந்தவர்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தக செயல்பாடுகள் மேம்பாடு அடையும்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம்/சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பைச் சேர்ந்த தொலைத்தொடர்பு அமைச்சர்கள், அதன் பொதுச்செயலர் மற்றும் மூத்த அதிகாரிகள், ஐநா சபையின் தலைமைகள் மற்றும் இந்தியாவில் உள்ள சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், தூதுவர்கள், தொழில்துறையின் தலைமைகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், குறு, சிறு நடுத்தரதொழில் நிறுவனங்கள், கல்வித்துறையின் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Head-on | Why the India-Middle East-Europe corridor is a geopolitical game-changer

Media Coverage

Head-on | Why the India-Middle East-Europe corridor is a geopolitical game-changer
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 26, 2023
September 26, 2023
பகிர்ந்து
 
Comments

New India Extends Its Appreciation and Gratitude for Yet Another Successful Rozgar Mela

Citizens Praise PM Modi's Speech at ‘G20 University Connect’