சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் சர்வதேச ஒலிம்பிக் குழுமக் கூட்டம் நடைபெறுகிறது

141-வது சர்வதேச ஒலிம்பிக் குழுமக் கூட்டத்தை 2023, அக்டோபர் 14 அன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

 

சர்வதேச ஒலிம்பிக் குழும உறுப்பினர்களின் முக்கியக் கூட்டமாக சர்வதேச குழும  அமர்வு செயல்படுகிறது. ஒலிம்பிக் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் இதில் மேற்கொள்ளப்பட உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுமக் கூட்டத்தை இந்தியா நடத்துகிறது. கடைசியாக 86-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

 

இந்தியாவில் நடைபெறும் 141-வது சர்வதேச ஒலிம்பிக் குழுமக் கூட்டம், உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், விளையாட்டு சிறப்பைக் கொண்டாடுவதற்கும், நட்பு, கண்ணியம் மற்றும் ஒலிம்பிக் லட்சியங்களை மேம்படுத்துவதற்கும் நாட்டின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இது விளையாட்டு தொடர்பான பல்வேறு தரப்பினரிடையே தொடர்பு மற்றும் அறிவு பகிர்வுக்கான வாய்ப்பை வழங்குகிறது.

 

சர்வதேச ஒலிம்பிக் குழுமத் தலைவர் திரு தாமஸ் பாக் மற்றும் ஐ.ஓ.சி.யின் பிற உறுப்பினர்கள், இந்தியாவைச் சேர்ந்த முக்கிய  விளையாட்டு  பிரபலங்கள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த அமர்வில் கலந்து கொள்வார்கள்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
LPG Bookings Drop To 77 Lakh From 88.8 Lakh As Govt Says Fuel Supplies Stable

Media Coverage

LPG Bookings Drop To 77 Lakh From 88.8 Lakh As Govt Says Fuel Supplies Stable
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 15, 2026
March 15, 2026

Empowering Bharat: From Loans to Global Leadership Under PM Modi