பகிர்ந்து
 
Comments

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாலையோர வியாபாரிகளுடன் 2020 செப்டம்பர் 9 அன்று 'சுவநிதி சம்வாத்' என்னும் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடவிருக்கிறார்.

 

கொவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள சாலையோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காக 2020 ஜூன் 1 அன்று பிரதமரின் சுவநிதி திட்டத்தை இந்திய அரசு தொடங்கியது.

 

மத்தியப் பிரதேசத்தில் 4.5 லட்சம் சாலையோர வியாபாரிகள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள நிலையில், 4 லட்சத்துக்கும் அதிகமான வியாபாரிகளுக்கு அடையாள எண்ணும் வர்த்தக சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுடைய 2.45 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் வங்கிகளுக்கு அனுபப்பட்டு, ரூ 140 கோடி நிதியுதவி சுமார் 1.4 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்த விண்ணப்பங்களில் 45 சதவீதம் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மட்டுமே வந்திருக்கும் நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணைக்கையில் இம்மாநிலமே முன்னணியில் உள்ளது.

 

378 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பொது இடங்களில் எல் ஈ டி திரைகள் அமைப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள பயனாளிகள் இந்த நிகழ்ச்சியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இணையம் மூலமாகவும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ள நிலையில், அதற்கான பதிவை https://pmevents.ncog.gov.in/ என்னும் மைகவ் இணைப்பின் மூலம் செய்து கொள்ளலாம்.

 

மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவ்ராஜ் சிங் சவுஹானும் காணொலி மூலம் இந்த நிகழ்வில் பங்கேற்பார்.

 

மாநிலத்திலுள்ள 3 பயனாளிகள் அவர்கள் விற்பனை செய்யும் இடத்திலிருந்தே மெய்நிகர் முறையில் இணைக்கப்பட்டு, அவர்களுடன் பிரதமர் உரையாடுவார். இத்திட்டத்தை பற்றி மாநிலத்தால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று இந்த நிகழ்ச்சியின் போது திரையிடப்படும்.

 

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
Capital expenditure of States more than doubles to ₹1.71-lakh crore as of Q2

Media Coverage

Capital expenditure of States more than doubles to ₹1.71-lakh crore as of Q2
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 6, 2021
December 06, 2021
பகிர்ந்து
 
Comments

India takes pride in the world’s largest vaccination drive reaching 50% double dose coverage!

Citizens hail Modi Govt’s commitment to ‘reform, perform and transform’.