ராய்பூரில் புதிதாக கட்டப்பட்ட தேசிய உயிரியல் அழுத்த சகிப்புத்தன்மை நிறுவன வளாகத்தை பிரதமர் தேசத்திற்கு அர்ப்பணிக்கிறார்
வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதையும் பிரதமர் வழங்குகிறார்

பருவநிலை எதிர்வினை தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதற்கான மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், செப்டம்பர் 28 அன்று காலை 11 மணிக்கு அனைத்து ஐசிஏஆர் நிறுவனங்கள், மாநில மற்றும் மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் கிரிஷி விக்யான் கேந்திரங்களில் நடைபெறவுள்ள அகில இந்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

​​தேசிய உயிரியல் அழுத்த சகிப்புத்தன்மை நிறுவனம், ராய்ப்பூருக்காக புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு பசுமை வளாக விருதை பிரதமர் வழங்குவார், மேலும் புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் மற்றும் விவசாயிகளுடனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரிடமும் அவர் உரையாடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சரும், சத்திஸ்கர் முதலமைச்சரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிறப்பு பண்புகள் கொண்ட பயிர் வகைகள் பற்றி பருவநிலை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய இரட்டை சவால்களை எதிர்கொள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐசிஏஆர்) சிறப்புப் பண்புகளைக் கொண்ட பயிர் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பருவநிலை எதிர்வினை மற்றும் அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் போன்ற சிறப்புப் பண்புகளைக் கொண்ட முப்பத்தைந்து பயிர் வகைகள் 2021-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

வறட்சியைத் தாங்கும் கொண்டைக்கடலை வகைகள், வில்ட்,  ஸ்டீரிலிட்டி மொசைக் எதிர்ப்பு பிஜியன் கடலை, சீக்கிரம் விளையும் சோயாபீன், நோய் எதிர்ப்பு அரிசி மற்றும் செரிவூட்டப்பட்ட கோதுமை வகைகள், முத்து தினை, மக்காச்சோளம் மற்றும் கொண்டைக்கடலை, குயினோவா, பக்வீட், விங்க்ட் பீன் மற்றும் ஃபாபா பீன் ஆகியவை இதில் அடங்கும். 

சில பயிர்களில் காணப்படும் மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகளை நிவர்த்தி செய்யும் வகைகளும் இந்த சிறப்பு பண்புகள் பயிர் வகைகளில் அடங்கும். அத்தகைய வகைகளின் எடுத்துக்காட்டுகளில் பூசா டபுள் ஜீரோ கடுகு 33, முதல் கனோலா தர கலப்பின ஆர்சிஎச் 1 <2% எரூசிக் அமிலம் மற்றும் <30 பிபிஎம் குளுக்கோசினோலேட்டுகள் மற்றும் இரண்டு ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகளான குனிட்ஸ் ட்ரிப்சின் இன்ஹிபிட்டர் மற்றும் லிபோக்சிஜனேஸ் ஆகியவை இல்லாத சோயாபீன் வகை ஆகியவை அடங்கும். சோயாபீன், சோளம் மற்றும் பேபி கார்ன் போன்றவற்றில் சிறப்புப் பண்புகளைக் கொண்ட பிற வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தேசிய உயிரியல் அழுத்த மேலாண்மை நிறுவனம் பற்றி

உயிரியல் அழுத்தங்களில் அடிப்படை மற்றும் மூலோபாய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும், மனித வளத்தை மேம்படுத்துவதற்கும் கொள்கை ஆதரவை வழங்குவதற்கும் ராய்ப்பூரில் உள்ள தேசிய உயிரியல் அழுத்த மேலாண்மை நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. 2020-21 கல்வியாண்டில் இருந்து முதுநிலை படிப்புகளை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

பசுமை வளாக விருதுகள் பற்றி

மாநில மற்றும் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை மேலும் பசுமையாகவும் தூய்மையாகவும் பேணும் நடைமுறைகளை ​​ஊக்குவிப்பதற்காக பசுமை வளாக விருதுகள் தொடங்கப்பட்டது, மேலும், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் குப்பையில் இருந்து வளம் இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட  மாணவர்களை இது தூண்டுகிறது. மற்றும் தேசிய கல்வி கொள்கை-2020-ன் படி சமூக இணைப்புகளையும் இது ஏற்படுத்துகிறது.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India leads globally in renewable energy; records highest-ever 31.25 GW non-fossil addition in FY 25-26: Pralhad Joshi.

Media Coverage

India leads globally in renewable energy; records highest-ever 31.25 GW non-fossil addition in FY 25-26: Pralhad Joshi.
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles demise of Baba Adhav Ji
December 09, 2025

The Prime Minister, Shri Narendra Modi, condoled the passing away of Baba Adhav Ji today.

The Prime Minister said Baba Adhav Ji will be remembered for his efforts to serve society through various causes, notably empowering the marginalised and furthering labour welfare.

In a post on X, Shri Modi wrote:

“Baba Adhav Ji will be remembered for his efforts to serve society through various causes, notably empowering the marginalised and furthering labour welfare. Pained by his passing away. My thoughts are with his family and admirers. Om Shanti.” 

“विविध सामाजिक कामांसाठी आयुष्य वाहून घेत समाजसेवा करणारे, विशेषतः वंचितांचे सबलीकरण आणि कामगार कल्याणासाठी लढणारे बाबा आढावजी, त्यांच्या या कार्यासाठी सदैव स्मरणात राहतील. त्यांच्या निधनाने अतिशय दुःख झाले आहे. त्यांचे कुटुंब आणि प्रशंसकांप्रति माझ्या संवेदना. ॐ शांती.”