நவராத்திரியையொட்டி பண்டிட் ஜஸ்ராஜின் ஆத்மார்த்தமான பாடல் ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். நவராத்திரி என்பது தூய்மையான பக்தியைப் பற்றியது என்றும், இந்த பக்தியை பலர் இசை மூலம் அடைந்துள்ளனர் என்றும் திரு மோடி குறிப்பிட்டார். நீங்கள் பஜனை பாடினாலோ அல்லது பிரபலமான பஜனை பாடல் தங்களிடம் இருந்தாலோ அவற்றை தன்னிடம் பகிர்ந்து கொள்ளுமாறும் தாம் அவற்றில் சிலவற்றை வரும் நாட்களில் பதிவிடுவேன் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“நவராத்திரி என்பது தூய்மையான பக்தியைப் பற்றியது. இந்த பக்தியை பலர் இசை மூலம் அடைந்துள்ளனர். பண்டிட் ஜஸ்ராஜின் ஆத்மார்த்தமான பாடல் ஒன்றை பகிர்ந்துள்ளேன்.
நீங்கள் பஜனை பாடினாலோ அல்லது பிரபலமான பஜனை உங்களிடம் இருந்தாலோ அவற்றை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் அவற்றில் சிலவற்றை வரும் நாட்களில் பதிவிடுவேன்!.
https://youtube.com/watch?v=0NlwLAkuXvo"
Navratri is about pure devotion. So many people have encapsulated this devotion through music. Sharing one such soulful rendition by Pandit Jasraj ji.
— Narendra Modi (@narendramodi) September 22, 2025
If you have sung a Bhajan or have a favourite one, please share it with me. I will be posting some of them in the coming days!…


