துறவி ரவிதாஸ் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். தமது அரசால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலிலும் பூஜ்ய ஸ்ரீ குரு ரவிதாஸ் அவர்களின் உணர்வு பொதிந்திருப்பதற்குப் பெருமிதம் அடைவதாகவும் அவர் கூறினார். 

தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"நாளை மகா துறவி குரு ரவிதாஸ் அவர்களின் பிறந்தநாள். சமூகத்திலிருந்து சாதி, தீண்டாமை போன்ற தீய வழக்கங்களை அகற்றுவதற்காக அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த விதம், இன்றும் நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது."

“இந்தத் தருணத்தில், துறவி ரவிதாஸ் அவர்களின் புனிதத் தலத்தைப் பற்றிய சில விஷயங்களை நான் நினைவுபடுத்துகிறேன். 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், இங்கு தரிசனம் மற்றும் லங்கர் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்தப் புனித யாத்திரை தலத்தின் வளர்ச்சிப் பணிகளில் எந்தத் தொய்வும் இருக்காது"

 “எங்கள் அரசின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு திட்டத்திலும் பூஜ்ய ஸ்ரீ குரு ரவிதாஸ் அவர்களின் உணர்வை நாங்கள் உள்வாங்கியிருக்கிறோம் என்பதைக் கூறுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, காசியில் அவரது நினைவாக கட்டுமானப் பணிகள் முழு கம்பீரத்துடனும் தெய்வீகத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன"

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Beyond Make in India: Building a globally competitive manufacturing ecosystem

Media Coverage

Beyond Make in India: Building a globally competitive manufacturing ecosystem
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 6, 2026
June 06, 2026

Viksit Bharat Rising: PM Modi's Vision Powers Energy, Defense & Digital Dominance