பிரதமர் திரு. நரேந்திர மோடியை உஸ்பெகிஸ்தான் குடியரசின் அதிபர் மேதகு திரு. ஷவ்கத் மிர்சியோயேவ் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மற்றும் இந்திய மக்களுக்கு அதிபர் திரு மிர்சியோயேவ் தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வர்த்தகம், இணைப்பு, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் ஏராளமான முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
பரஸ்பர நலன் பயக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், இந்தியாவிற்கும், மத்திய ஆசியாவிற்கும் இடையிலான பழங்கால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இரு தலைவர்களும் மீண்டும் தொடர்புகொள்ள ஒப்புக்கொண்டனர்.
Had a fruitful conversation with President of Uzbekistan, Mr. Shavkat Mirziyoyev. We reviewed the progress achieved in key areas of our bilateral cooperation and reaffirmed our shared resolve to further advance the India–Uzbekistan Strategic Partnership.@president_uz
— Narendra Modi (@narendramodi) August 12, 2025


