மகளிருக்கு அதிகாரமளித்தல் குறித்த பிரதமரின் கனவை நிறைவேற்ற ஒரு பங்குதாரராக இருக்க தேவாஸ் பகுதி பெண்கள் உறுதியளித்தனர்
"நமது தாய்மார்களின், சகோதரிகளின் நம்பிக்கை நமது நாட்டைத் தன்னிறைவு பெறச்செய்யும்"

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

 நாடு முழுவதிலுமிருந்து நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

1.3 லட்சம் பெண்களைக் கொண்ட சுய உதவிக் குழுக்களில் அங்கம் வகிக்கும் மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியைச்  சேர்ந்த ரூபினா கான், தனது சுய உதவிக் குழுவிடம் கடன் பெற்று துணிகள் விற்கும் ஒரு சிறிய தொழிலைத் தொடங்கினார். பின்னர் அவர் தனது பொருட்களை பழைய மாருதி வேன் மூலம் விற்பனை செய்யும் அளவுக்கு முன்னேறினார்.  இது குறித்து பிரதமர் 'என்னிடம் சைக்கிள் கூட இல்லை' என்று நகைச்சுவையாக கூறினார். பின்னர் தேவாஸில் ஒரு கடையை திறந்து மாநில அரசின் பணிகளையும் பெற்றார்.

அவர்கள் தொற்றுநோய் காலத்தின் போது முகக்கவசங்கள், பிபிபி உபகரணம், சானிடைசர்கள் தயாரிப்பதன் மூலம் பங்களித்தனர். தொகுப்பு வள நபராகத் தனது அனுபவத்தை விவரித்த அவர், தொழில்முனைவோர் வாழ்க்கைக்கு பெண்களை எவ்வாறு ஊக்குவித்தார் என்பதை விவரித்தார். 40 கிராமங்களில் குழுக்கள் அமைக்கப்பட்டன.

சுய உதவிக் குழுக்களின் பெண்களில், சுமார் 2 கோடி லட்சாதிபதி மகளிரை உருவாக்கும் எண்ணம் தமக்கு இருப்பதாக பிரதமர் அவரிடம் கூறினார். இந்தக் கனவை நிறைவேற்ற தாமும் ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புவதாக பிரதமருக்கு உறுதியளித்த அவர், 'அனைத்து மகளிரும் ஒரு லட்சாதிபதியாக இருக்க  வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.' பெண்கள் அனைவரும் ஒவ்வொரு லட்சாதிபதி மகளிரை உருவாக்குவதில் ஒரு பகுதியாக இருக்க தங்கள் கைகளை உயர்த்தினர்.

இதற்காக அவரது நம்பிக்கையை பிரதமர் பாராட்டினார். "நமது தாய்மார்களின், சகோதரிகளின் நம்பிக்கை நமது நாட்டை தன்னிறைவு அடையச் செய்யும்", என்று அவர் கூறினார். இம்ரான் கானின் பயணத்தைப் பாராட்டிய பிரதமர், சுய உதவிக் குழுக்கள் பெண்களுக்கு தற்சார்பு, அவர்களின் நம்பிக்கைக்கான ஊடகமாக விளங்குவதாகவும், குறைந்தபட்சம் 2 கோடி லட்சாதிபதி மகளிரை உருவாக்க கடினமாக உழைக்க தன்னைத் தூண்டுகிறது என்றும் கூறினார். அவர்களின் குழந்தைகளைப் படிக்க வைக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். தங்களுடைய கிராமம் செழிப்பாகிவிட்டது என்று அந்தப் பெண் தெரிவித்தார்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'It was an honour to speak with PM Modi; I am looking forward to visiting India': Elon Musk

Media Coverage

'It was an honour to speak with PM Modi; I am looking forward to visiting India': Elon Musk
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 20, 2025
April 20, 2025

Appreciation for PM Modi’s Vision From 5G in Siachen to Space: India’s Leap Towards Viksit Bharat