இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரக்கன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி, எண் 7, லோக் கல்யாண் மார்கில் இன்று நட்டார். “சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையில் அவர் அதீத ஆர்வம் கொண்டிருக்கிறார். எங்கள் விவாதங்களிலும் இந்தத் தலைப்பு அடிக்கடி இடம்பெறும்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவொன்றில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“மாண்புமிகு மன்னர் மூன்றாம் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரக்கன்று ஒன்றை இன்று காலை 7, லோக் கல்யாண் மார்கில் நட்டேன். சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையில் அவர் அதீத ஆர்வம் கொண்டிருக்கிறார். எங்கள் விவாதங்களிலும் இந்தத் தலைப்பு அடிக்கடி இடம்பெறும்.”
@RoyalFamily
This morning, planted a Kadamb sapling at 7, Lok Kalyan Marg, which was gifted by His Majesty King Charles III. He is very passionate about the environment and sustainability, a topic which features in our discussions too.@RoyalFamily pic.twitter.com/WtkjMVHqVz
— Narendra Modi (@narendramodi) September 19, 2025


