ராஜ்மாதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் துணிச்சல் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு இணையானவர் என்று திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,
"அவரது பிறந்தநாளில், ராஜ்மாதா விஜய ராஜே சிந்தியா அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் துணிச்சலுக்கும், தொலைநோக்குப் பார்வைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். முந்தைய மன்கிபாத் நிகழ்ச்சி ஒன்றில் அவரது சிறந்த ஆளுமையைப் பற்றி நான் கூறியதைப் பகிர்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
On her birth anniversary, tributes to Rajmata Vijaya Raje Scindia Ji. She was synonymous with courage and foresight. She devoted her life to serving others. Sharing what I had said during one of the previous #MannKiBaat programmes about her outstanding personality. pic.twitter.com/HTDBGxkSuw
— Narendra Modi (@narendramodi) October 12, 2022