2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடைபெற்ற தாக்குதலின் போது பணியில் இருந்து உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் பாதுகாப்பு படைவீரர்களுக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றபோது, தங்கள் கடமையை நிறைவேற்றி உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவை மற்றும் செய்த உயிர்த்தியாகம் ஆகியவை ஒவ்வொரு குடிமக்களையும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.”
I pay my tributes to all those security personnel who were martyred in the line of duty during the Parliament attack in 2001. Their service to the nation and supreme sacrifice continues to inspire every citizen.
— Narendra Modi (@narendramodi) December 13, 2021


