பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஸ்ரீ பிங்கலி வெங்கய்யா ஜியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார், நமது பெருமைமிக்க மூவர்ணக் கொடியை நமக்கு வழங்கியதில் அவர் ஆற்றிய பங்கிற்காக நினைவுகூரப்படுகிறார். வீடு தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்தை வலுப்படுத்தவும், மூவர்ணக் கொடியை பறக்கவிடவும் மக்களை வலியுறுத்திய திரு மோடி, இந்த இயக்கத்தில் மூவர்ணக் கொடியுடன் தங்கள் செல்ஃபி அல்லது புகைப்படங்களைப் பதிவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
“பிங்கலி வெங்கய்யா ஜியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நமக்கு பெருமை சேர்க்கும் மூவர்ணக் கொடியை வழங்கியதில் அவர் வகித்த பங்கிற்காக அவர் நினைவுகூரப்படுகிறார்!
எப்போதும் போல, வீடு தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்தை வலுப்படுத்தி மூவர்ணக் கொடியை பறக்கவிடுவோம். உங்கள் செல்ஃபி அல்லது புகைப்படங்களை harghartiranga.com -ல் பதிவேற்றவும்”
Tributes to Pingali Venkayya Ji on his birth anniversary. He is remembered for his role in giving us the Tricolour, which is our pride!
— Narendra Modi (@narendramodi) August 2, 2025
Like always, let’s strengthen #HarGharTiranga movement and fly the Tricolour. Do upload your selfie or photos on https://t.co/uJuh3CXyQS


