பீகார் கோகிலா சாரதா சின்ஹாவின் முதலாமாண்டு நினைவு நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். "நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் பீகாரின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு அவர் ஒரு புதிய அடையாளத்தை வழங்கினார், அதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். சத் என்ற மாபெரும் பண்டிகையுடன் தொடர்புடைய அவரது மெல்லிசைப் பாடல்கள் மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"பீகார் கோகிலா சாரதா சின்ஹா அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் அவருக்கு இதயபூர்வ அஞ்சலி. நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் பீகாரின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்தார், அதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். சத் என்ற மாபெரும் திருவிழாவுடன் தொடர்புடைய அவரது மெல்லிசைப் பாடல்கள் எப்போதும் மக்களின் மனதில் நிலைத்திருக்கும்."
बिहार कोकिला शारदा सिन्हा जी की पहली पुण्यतिथि पर उन्हें भावभीनी श्रद्धांजलि। उन्होंने बिहार की कला-संस्कृति को लोकगीतों के माध्यम से एक नई पहचान दी, जिसके लिए उन्हें सदैव याद किया जाएगा। महापर्व छठ से जुड़े उनके सुमधुर गीत हमेशा जनमानस में रचे-बसे रहेंगे।
— Narendra Modi (@narendramodi) November 5, 2025


