பகிர்ந்து
 
Comments

பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்ட பயனாளிகள் மற்றும் மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடினார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் மிகவும் திறமைவாய்ந்த மருத்துவர்களும், மருத்துவ உபகரணங்களும் இருப்பதாகவும், மக்கள் மத்தியில் முழுமையாக விழிப்புணர்வு இருப்பதாகவும் அவர் கூறினார். விழிப்புடன் செயல்படும் குடிமக்கள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அடிக்கடி கைகழுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதை, மிகைப்படுத்தி கூறுவதாகக் கருத முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், தும்மும்போது அல்லது இருமும்போது, தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க வாய் மற்றும் மூக்குப் பகுதியை கையால் மூடிக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அனைவரும் தேவையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தோம் என்று யாராவது சந்தேகித்தால், அச்சப்பட வேண்டாம். அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கும் நோய் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்களும் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா வைரஸ் குறித்து எந்த மாதிரியான வதந்தி பரப்புவதையும் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், மருத்துவரின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“ஒட்டுமொத்த உலகமுமே வணக்கம் கூறும் பழக்கத்தை மேற்கொள்கின்றனர். ஏதோ காரணங்களால், இந்தப் பழக்கத்தை நாம் கைவிட்டுவிட்டோம். கரங்களைக் கூப்பி வணக்கம் சொல்லும் பழக்கத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு இது சரியான நேரமாக உள்ளது,” என்றும் பிரதமர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read PM's speech

இந்தியாவின் ஒலிம்பிக் வீரர்களை ஊக்குவிக்கவும்!  #Cheers4India
Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
With end of Articles 370 and 35 (A), there’s peace, hope and democracy in J&K

Media Coverage

With end of Articles 370 and 35 (A), there’s peace, hope and democracy in J&K
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து
August 05, 2021
பகிர்ந்து
 
Comments

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்.

இது தொடர்பாக, பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது :

"வரலாற்று நிகழ்வு ! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் ஒரு நாள்.

வெண்கலத்தை தாயகத்திற்குக் கொண்டு வந்த நமது ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். இந்தச் சாதனையின் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். நமது ஹாக்கி அணியால் இந்தியா பெருமை கொள்கிறது. "