Lays foundation stone of a bridge connecting Palashbari and Sualkuchi on Brahmaputra river and project for beautification of Rang Ghar, Sivasagar
Inaugurates 500 TPD Menthol Plant in Namrup
Dedicates five railway projects to the nation
Witnesses mega Bihu dance featuring more than 10,000 performers
“This is beyond imagination, This is phenomenal. This is Assam ”
“Assam is finally becoming an A-One state”
“The consciousness of every Indian is made from the soil and traditions of the country and it is also the foundation of the Viksit Bharat”
“Rongali Bihu is a festival of heart and soul for the people of Assam”
“Viksit Bharat is our biggest dream”
“Today, connectivity is a four-pronged Mahayagya, physical connectivity, digital connectivity, social connectivity and cultural connectivity”
“The atmosphere of mistrust in the Northeast is going away”

அசாமின் கவுகாத்தியில் உள்ள சருசாஜெய் விளையாட்டு அரங்கத்தில் ரூ .1௦,9௦௦  மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் பலாசபரி மற்றும் சுயல்குச்சி பகுதிகளை இணைக்கும் வகையில் பிரம்மபுத்ரா நதியின் மீது கட்டப்படும்  பாலம், சிவசாகரில் உள்ள ரங் கார் அழகுபடுத்தும் திட்டம், நம்ரப்பில் உள்ள மென்தால் உற்பத்தி மையம், நிறைவடைந்த ஐந்து ரயில்வே திட்டங்களை  நாட்டு அர்பணித்தல் ஆகியவைகள் அடங்கும். மேலும்  பாரம்பரிய பிஹு நடனக்கலைஞர்களின் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சியையும் பிரதமர் கண்டு களித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், இன்றைய சிறந்த அற்புதமான நிகழ்வை கண்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் இதனை மறக்க முடியாது.  இந்த நிகழ்வின் சிறப்பான அதிர்வுகள் இந்தியா முழுமைக்கும் எதிரொலித்திருக்கும் என்றார்.  மேலும் நாட்டு மக்கள் அனைவரும் அசாமை சேர்ந்த கலைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் அறிந்து இருப்பர் என்று கூறிய பிரதமர், அவர்களின் உணர்வுகளையும், உற்சாகத்தையும்  நான் பாராட்டுகிறேன் என்றார். இதற்கு முன்னர் நான் விதான் சபா தேர்தலின் போது அசாம் வந்தேன். அப்போது  அசாம் மாநிலமே முன்னிலை பெற்று வருகிறது என்று  மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சத்தம் எழுப்பியதை நான் இங்கு நினைவு கூர்கிறேன் என்றார். அசாம் மாநில மக்களுக்கும், அனைவர்க்கும் பிஹு (அசாம் புத்தாண்டு தினம்) வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என்றார்.

வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக பஞ்சாபில் பைசாகி  திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மக்கள்  பொய்லா பைஷாக் என்றும், கேரள மக்கள் விஷு என்றும் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுகின்றனர். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற குறிக்கோளை வலியுறுத்தும் விதமாக இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் இவை இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும் முயற்சிக்கு செயல்பட உத்வேகம் அளிக்கும் என்றார். எய்ம்ஸ் மருத்துவமனை, மூன்று மருத்துவக்கல்லூரிகள், ரயில்வே திட்டங்கள், பிரம்மபுத்ரா நதியின் மீது பாலம் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன் என்றார்.

அசாம் மாநில மக்களின் கலாச்சாரத்தை மதிக்கும் மாண்பு பற்றி குறிப்பிட்ட பிரதமர், நமது திருவிழாக்கள் அனைத்தும் கலாச்சார அடிப்படையில் அமையப்பட்டு இருந்தாலும், அனைவரையும் ஒன்றிணைத்து முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறது என்றார். பல்லாயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு இந்தியரையும் ஒன்றிணைப்பதே இந்தியாவின் கலாச்சார பெருமையாகும். நம் நாடு அடிமைத்தனத்தில் சிக்கித்தவித்த போது ஒரே தேசமாக  ஒன்றிணைந்து வலிமையாக திகழ்ந்தது என்றார்.

பிரபல எழுத்தாளரும், சினிமா பிரபலமுமான  ஜோதி பிரசாத் அகர்வாலாவின் பிஸ்வா பிஜோய் நௌஜவான்' பாடலில் இருந்து சில வரிகளை மேற்கோள்காட்டிய பிரதமர், இந்த பாடல், அசாம் மாநில இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றார்.

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், இன்றைய சிறந்த அற்புதமான நிகழ்வை கண்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் இதனை மறக்க முடியாது.  இந்த நிகழ்வின் சிறப்பான அதிர்வுகள் இந்தியா முழுமைக்கும் எதிரொலித்திருக்கும் என்றார்.  மேலும் நாட்டு மக்கள் அனைவரும் அசாமை சேர்ந்த கலைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் அறிந்து இருப்பர் என்று கூறிய பிரதமர், அவர்களின் உணர்வுகளையும், உற்சாகத்தையும்  நான் பாராட்டுகிறேன் என்றார். இதற்கு முன்னர் நான் விதான் சபா தேர்தலின் போது அசாம் வந்தேன். அப்போது  அசாம் மாநிலமே முன்னிலை பெற்று வருகிறது என்று  மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சத்தம் எழுப்பியதை நான் இங்கு நினைவு கூர்கிறேன் என்றார். அசாம் மாநில மக்களுக்கும், அனைவர்க்கும் பிஹு (அசாம் புத்தாண்டு தினம்) வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என்றார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model

Media Coverage

IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 13, 2026
June 13, 2026

Viksit Bharat Accelerating: Tech, Defense, Infra & Exports Power India's Global Leap Under the Leadership of PM Modi