These projects will promote industrial growth, boost tourism and enhance ease of living for the people of Keralam: PM
The expansion of the petroleum sector is essential for Make in India and a self-reliant India, the essence behind laying the foundation stone of the Poly-Propylene unit at Kochi Refinery today: PM
Today, the world praises India for its investments in modern infrastructure; This year's Union Budget has also allocated a record amount of funds for infrastructure: PM
Keralam is reaping tremendous benefits from this investment in infrastructure: PM
These projects will play a pivotal role in fulfilling our resolve for a 'Viksit Keralam': PM

கேரளாவின் பரபரப்பு வாய்ந்த கடலோர நகரமான கொச்சிக்கு இன்று சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அங்கு அதிகளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் பல்வேறுத் திட்டங்களைத் தொடங்கி வைத்ததன் மூலம், அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிக முதலீடுகளுக்கான அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் ரூ 11,000 கோடி மதிப்பிலான பல்வேறுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்றக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கொச்சிக்கு வருவது எப்போதுமே ஒரு அற்புதமான அனுபவம் என்று குறிப்பிட்டார், "இந்த திட்டங்களுக்காக கேரள மாநில மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

 

கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில் பாலிப்ரொப்பிலீன் உற்பத்திப் பிரிவிற்கு அவர் இன்று அடிக்கல் நாட்டுவது, நாட்டின் பெட்ரோலியத் துறையை வலுவடையச் செய்வதாகும் என்று பிரதமர் எடுத்துரைத்தார். பேக்கேஜிங், ஜவுளி மற்றும் மருத்துவ சாதனத் தொழில்களை ஆதரிக்க இந்த அலகு ஆண்டுதோறும் நான்கு லட்சம் டன் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' என்ற திட்டத்திற்காக, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க, பெட்ரோலியத் துறையின் விரிவாக்கம் அவசியம்" என்று குறிப்பிட்டார்.

உலகளவில், உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியில், நாட்டின் முன்னேற்றத்தை நீடித்த எரிசக்திக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது என்று பிரதமர் கூறினார். சூரிய மின் உற்பத்தித் துறையில் கேரள மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கில், மேற்கு கல்லாடாவில் 50 மெகாவாட் மிதக்கும் சூரிய மின் திட்டத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளதாக திரு மோடி குறிப்பிட்டார். கேரளத்தில் அதிக எண்ணிக்கையிலான நீர்நிலைகள் உள்ள நிலையில், மிதக்கும் சூரிய மின் உற்பத்திக்கான ஏராளமான வாய்ப்புக்களை இம்மாநிலம் கொண்டுள்ளது என்று திரு மோடி கூறினார். பசுமை எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்திற்கான அவசியத்தை எடுத்துரைத்த திரு மோடி, "சூரிய மின் உற்பத்தியில் கேரளா முன்னேற்றம் அடைந்து வருவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் தொடர் முன்முயற்சிகள் காரணமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்".

 

அமிர்த பாரத் நிலையத் திட்டம், ரயில்வே மின்மயமாக்கல் மூலம் பிராந்திய ரயில் போக்குவரத்துக்கான இணைப்பில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் பிரதமர் விவரித்தார். ஷோரனூர் சந்திப்பு, குட்டிபுரம் மற்றும் சங்கனாச்சேரியில் நவீனமயமாக்கல் முயற்சிகள், புதிய பாலக்காடு-பொள்ளாச்சி ரயில் சேவையுடன், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநில மக்களின் பயண அனுபவத்தையும் மாற்றும். உள்ளூர் வளர்ச்சியில் தேசிய பட்ஜெட்டின் தாக்கத்தை வலியுறுத்திய திரு மோடி, "இன்று, நவீன உள்கட்டமைப்பில் செய்யப்படும் முதலீட்டிற்காக உலக நாடுகள் இந்தியாவிற்குப் பாராட்டு தெரிவித்து வருவதாக" பிரதமர் கூறினார்.

சாலை உள்கட்டமைப்பு குறித்து எடுத்துரைத்த அவர், கோழிக்கோடு புறவழிச்சாலை மற்றும் அழிக்கல் துறைமுகத்திற்கான மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகள் உள்ளிட்ட புதிய ஆறு வழிச் சாலை அமைக்கும் திட்டங்கள் பயண நேரத்தையும், போக்குவரத்து நெரிசலையும் பெருமளவில் குறைக்கும் என்பதை உறுதிப்படத் தெரிவித்தார். "இந்தத் திட்டங்கள் அனைத்தும் கேரள மாநில விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிப்பதுடன், அவை இங்குள்ள சுற்றுலா மற்றும் பிற தொழில்களுக்கு ஊக்கமளிக்கும்" என்று திரு மோடி வலியுறுத்தினார்.

 

உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் திட்டங்களுக்கு முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் இளைஞர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்புக்கு ஒரு ஊக்கியாக செயல்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்தினார். இந்த பல்துறை திட்டங்கள் மாநிலத்தின் வளமான எதிர்காலத்திற்கு அவசியமான கட்டுமானத் தொகுதிகள் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பிராந்திய முன்னேற்றத்திற்கான மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், "இந்தத் திட்டங்கள் 'வளர்ச்சியடைந்த கேரளா' என்ற உறுதியை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Domestic air passenger traffic to rise by 3-6 pc in this fiscal: ICRA

Media Coverage

Domestic air passenger traffic to rise by 3-6 pc in this fiscal: ICRA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 24, 2026
July 24, 2026

Aatmanirbhar in Action — Space, Missiles, EVs & Livelihoods Under PM Modi’s Watch