சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுமார் ரூ 7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
103 கிமீ நீளமுள்ள ராய்ப்பூர் - காரியார் சாலை இரட்டை ரயில் பாதை மற்றும் கியோட்டி – அந்தகரையை இணைக்கும் 17 கிமீ நீளமுள்ள புதிய ரயில் பாதையை அர்ப்பணித்தார்
கோர்பாவில் இந்தியன் எண்ணெய் கழகத்தின் ஆலையை அர்ப்பணித்தார்
அந்தகர் - ராய்ப்பூர் ரயிலை காணொலி மூலம் கொடியசைத்து இயக்கி வைத்தார்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 75 லட்சம் அட்டைகளை விநியோகிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
"இன்றைய திட்டங்கள் சத்தீஸ்கரின் பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சி மற்றும் வசதிக்கான புதிய பயணத்தை குறிக்கின்றன"
"வளர்ச்சியில் பின்தங்கிய குறிப்பிட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது"
"நவீன உள்கட்டமைப்பு சமூக நீதியுடன் தொடர்புடையது"
"இன்று சத்தீஸ்கர்
மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 75 லட்சம் அட்டைகள் விநியோகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சுமார் ரூ. 7500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டிநிறைவடைந்த திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணித்தார்ரூ. 6,400 கோடி மதிப்பிலான 5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்ரூ.750 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட 103 கிமீ நீளமுள்ள ராய்ப்பூர் - காரியார் சாலை ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்மேலும்கோர்பாவில் ரூ. 130 கோடி செலவில் கட்டப்பட்ட ஆண்டுக்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்திய எண்ணெய் கழகத்தின் பாட்டிலிங் ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்அந்தகர் - ராய்பூர் ரயிலையும் அவர் காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்மேலும்ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 75 லட்சம் அட்டைகள் விநியோகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர்உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு போன்ற துறைகளில் ரூ. 7000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை சத்தீஸ்கர் மாநிலம் பெற்று வருவதால்இன்றைய நிகழ்ச்சி சத்தீஸ்கரின் வளர்ச்சிப் பயணத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்இன்றைய திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன்மாநிலத்தில் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்இந்தத்  திட்டங்கள் மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் அதே வேளையில்சத்தீஸ்கரின் நெல் விவசாயிகளுக்கும்கனிம தொழில் மற்றும் சுற்றுலாத் துறைக்கும் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். "இன்றைய திட்டங்கள் சத்தீஸ்கரின் பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சி மற்றும் வசதிக்கான புதிய பயணத்தை குறிக்கும்என்று குறிப்பிட்ட பிரதமர்,   மாநில மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

எந்தவொரு பிராந்தியத்தின் அபிவிருத்தி தாமதம் அடைகிறதோஇங்கு உள்கட்டமைப்பு பற்றாக்குறை நிலவும் என்று பிரதமர் குறிப்பிட்டார்எனவேஇதனைக் கருத்தில் கொண்டு,  வளர்ச்சியில் பின்தங்கிய குறிப்பிட்ட பிராந்தியங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார் அவர்உள்கட்டுமானம் என்பது எளிதாக வாழ்வது மற்றும் எளிதாக வணிகம் செய்வதுஉள்கட்டமைப்பு என்பது வேலை வாய்ப்புகள் மற்றும் வேகமான வளர்ச்சியைக் குறிக்கிறது என்று பிரதமர் கூறினார்.  பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் மாநிலத்தின் ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களுக்கு சாலை இணைப்பு விரிவடைந்துள்ளது.  சத்தீஸ்கரில் நவீன உள்கட்டமைப்பு மேம்பாடுகளும் காணப்படுகின்றன என்று அவர் கூறினார்சுமார் 3,500 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும்அங்கு சுமார் 3000 கிமீ பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்ராய்ப்பூர்-கோடெபோட் மற்றும் பிலாஸ்பூர்-பத்ரபாலி நெடுஞ்சாலைகள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். "ரயில்சாலைதொலைத்தொடர்பு என எதுவாக இருந்தாலும்சத்தீஸ்கரில் கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு  முன்னெப்போதும் இல்லாத வகையில்அனைத்து வகையான இணைப்பையும் மேம்படுத்தியுள்ளதுஎன்று அவர் கூறினார். 

நவீன உள்கட்டமைப்புகளும் சமூக நீதியுடன் தொடர்புடையது என்பதை எடுத்துரைத்த பிரதமர்ஏழைகள்தலித்துகள்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் குடியிருப்புகளை இணைக்கும் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்ட இன்றைய திட்டங்கள் நோயாளிகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவமனைகளுக்கான இணைப்பை மேம்படுத்தும் என்று குறிப்பிட்டார்.  ஒன்பது ஆண்டுகளுக்கு முன்புசத்தீஸ்கரில் 20 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்களில் எந்த விதமான மொபைல் இணைப்பும் இல்லைஆனால் இன்று அந்த எண்ணிக்கை சுமார் 6 சதவீதமாக குறைந்துள்ளதுமேலும் இப்பகுதியின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகப்பெரிய பயனாளிகளாக உள்ளனர்.  இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ள இந்த பழங்குடியின கிராமங்களில் பெரும்பாலானவை ஒரு காலத்தில் நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்நல்ல 4ஜி இணைப்பை உறுதி செய்வதற்காக அரசாங்கம் 700க்கும் மேற்பட்ட மொபைல் கோபுரங்களை நிறுவி வருவதாக பிரதமர் தெரிவித்தார்சுமார் 300 கோபுரங்கள் ஏற்கனவே செயல்படத் தொடங்கியுள்ளன என்றும் அவர் கூறினார்ஒரு காலத்தில் மௌனமாக இருந்த பழங்குடியின கிராமங்கள் இப்போது ரிங்டோன்கள் என்னும் ஒலியைக் கேட்கின்றன என்று அவர் கூறினார்மொபைல் இணைப்பின் வருகை கிராம மக்களுக்கு பல பணிகளில் உதவியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.  இதுதான் சமூக நீதிமேலும் இது அனைவருக்குமான வளர்ச்சி  என்று பிரதமர் கூறினார்.

"இன்று சத்தீஸ்கர் இரண்டு பொருளாதார வழித்தடங்களுடன் இணைகிறது", ராய்ப்பூர் - தன்பாத் பொருளாதார வழித்தடம் மற்றும் ராய்ப்பூர் - விசாகப்பட்டினம் பொருளாதார வழித்தடம் ஆகியவை முழுப் பகுதியின் தலையெழுத்தையும் மாற்றப் போகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்பொருளாதார வழித்தடங்கள் ஒரு காலத்தில் பின்தங்கிய மாவட்டங்கள் என்று அழைக்கப்பட்டவன்முறை மற்றும் அராஜகம் நிலவிய மாவட்டங்கள் வழியாக செல்கிறது என்று அவர் குறிப்பிட்டார்இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் பொருளாதார வழித்தடமானதுராய்ப்பூர்-விசாகப்பட்டினம் இடையேயான பயணத்தை  பாதியாகக் குறைக்கிறதுஇதனால்,  இந்தப் பகுதியின் புதிய உயிர்நாடியாக இது மாறும் என்றார். 6 வழிச் சாலையானது தம்தாரியின் நெல் விளையும் பகுதியையும்காங்கரின் பாக்சைட் பகுதியையும்,  கோண்டகானின் கைவினைப் பொருட்களின் செழுமையையும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்இந்த சாலை வனவிலங்கு பகுதி வழியாக செல்லும் என்பதால்வனவிலங்குகளின் வசதிக்காக சுரங்கப்பாதைகள் மற்றும் விலங்குகளுக்கான பாதைகள் அமைக்கப்படுவதையும் பிரதமர் பாராட்டினார். "தல்லி ராஜ்ஹாராவிலிருந்து ஜக்தல்பூர் வரையிலான ரயில் பாதை மற்றும் அந்தகரில் இருந்து ராய்பூருக்கு நேரடி ரயில் சேவை ஆகியவை தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்வதை எளிதாக்கும்என்று திரு மோடி கூறினார். 

"இயற்கை வளம் உள்ள பகுதிகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும்புதிய தொழில்களை அமைப்பதற்கும் அரசு உறுதிபூண்டுள்ளதுஎனக் கூறிய பிரதமர்இதற்காக கடந்த 9 ஆண்டுகளில் சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை எடுத்துரைத்தார்அரசின் கொள்கைகள் காரணமாகசத்தீஸ்கர் மாநிலத்தின் வருவாய் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்குறிப்பாக சுரங்கங்கள் மற்றும் கனிமச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்ட பிறகுசத்தீஸ்கர் மாநிலம் ராயல்டி வடிவத்தில் அதிக நிதியைப் பெறத் தொடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2014-க்கு முந்தைய நான்கு ஆண்டுகளில்சத்தீஸ்கருக்கு ராயல்டியாக ரூ.1300 கோடி கிடைத்ததாக பிரதமர் தெரிவித்தார். 2015-16 முதல் 2020-21-ம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநிலம் ராயல்டியாக சுமார் 2800 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்மாவட்ட கனிம நிதியை உயர்த்தியதன் மூலம் கனிம வளம் உள்ள மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.  "தற்போது மாவட்ட கனிம நிதி குழந்தைகளுக்கான பள்ளிகள்நூலகங்கள்சாலைகள்தண்ணீர் வசதி போன்ற பல வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடப்படுகிறதுஎன்று பிரதமர் கூறினார்.

சத்தீஸ்கரில் தொடங்கப்பட்டுள்ள 1 கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமான ஜன்தன் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.6000 கோடிக்கும் மேல் வைப்பு வைக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்த பிரதமர்இது ஏழை குடும்பங்கள்விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சொந்தமானவை என்று கூறினார்ஜன்தன் கணக்குகள் ஏழை மக்கள் அரசின் நேரடி உதவியைப் பெற உதவுவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்சத்தீஸ்கரில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு தொடர்ந்து உழைத்து வருவதாகக் கூறிய பிரதமர்முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் இளைஞர்களுக்கு 40,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாகவும்இது ஏராளமான பழங்குடியின இளைஞர்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பெரிதும் உதவி புரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்கொரோனா காலத்தில் நாட்டின் சிறுதொழில்களுக்கு உதவும் வகையில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாகவும்இதன் மூலம் சத்தீஸ்கரைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் நிறுவனங்களுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் உதவி கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தெருவோர வியாபாரிகளுக்கு பிணையின்றி கடன் வழங்கும் பிரதமர் ஸ்வானிதி யோஜனா திட்டத்தை குறிப்பிட்ட பிரதமர்இத்திட்டத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்கிராமங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் போதுமான வேலைவாய்ப்பை வழங்குவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.25,000 கோடிக்கு மேல் வழங்கியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

75 லட்சம் பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டைகள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர்இதன் மூலம் ஏழை மற்றும் பழங்குடியின குடும்பங்கள் மாநிலத்தின் 1500-க்கும் மேற்பட்ட பெரிய மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறமுடியுமெனக் கூறினார்ஏழைபழங்குடியினர்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கைக்கு ஆயுஷ்மான் யோஜனா உதவி வருவதாகவும் அவர் திருப்தி தெரிவித்தார்இதனைத் தொடர்ந்துஉரையை நிறைவு செய்த பிரதமர்சத்தீஸ்கரின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரே மாதிரியான சேவை உணர்வோடு சேவை செய்வதாக உறுதியளித்தார்.

சத்தீஸ்கர் ஆளுநர் திரு.பிஸ்வபூசன் ஹரிசந்தன்சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு.பூபேஷ் பாகேல்சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் திரு.டி.எஸ்சிங் தியோமத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரிமத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில்,  பிரதமர் மோடி சுமார் ரூ.6,400 கோடி மதிப்பிலான 5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில் ஜபல்பூர்-ஜக்தல்பூர் தேசிய நெடுஞ்சாலையில்ராய்ப்பூர் முதல் கோடேபோட் வரையிலான 33 கிமீ நீளமுள்ள 4-வழிப்பாதையும் அடங்கும்இந்த சாலை சுற்றுலாவை மேம்படுத்துவதோடுஜக்தல்பூருக்கு அருகிலுள்ள எஃகு ஆலைகளுக்கு மூலப்பொருட்களை கொண்டு செல்லவும்தயாரிப்புகளை எடுத்து செல்லவும்,  உதவுவதோடு இரும்பு தாது நிறைந்த இப்பகுதியில் போக்குவரத்தை எளிதாக்குகிறது. NH-130  தேசிய நெடுஞ்சாலையில் பிலாஸ்பூரிலிருந்து அம்பிகாபூர் பகுதியில்பிலாஸ்பூர் - பத்ரபாலி இடையேயான 53 கிமீ நீளமுள்ள 4 வழிப்பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்இச்சாலை உத்தரபிரதேசத்துடன் சத்தீஸ்கருடனான போக்குவரத்தை மேம்படுத்தவும்அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களுக்கு இணைப்பை வழங்குவதன் மூலம் நிலக்கரி இயக்கத்தை அதிகரிக்கவும் உதவும்.

 

ராய்ப்பூர் - விசாகப்பட்டினம் இடையேயான 6 வழி பசுமைவழிச்சாலையின் சத்தீஸ்கர் பகுதிக்கான 3 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். NH 130CD-ல் 43 கிமீ நீளமுள்ள ஜாங்கி-சர்கி இடையேயான ஆறுவழிப்பாதை, 57 கிமீ நீளமுள்ள சர்கி - பசன்வாஹி இடையேயான ஆறுவழிப் பாதை மற்றும் 25 கிமீ நீளமுள்ள பசன்வாஹி - மரங்புரி இடையிலான ஆறுவழிப்பாதையும் அடங்கும்இதில்உடந்தி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் வனவிலங்கு நடமாட்டத்திற்காக 27 விலங்குகளுக்கான வழிகளை உள்ளடக்கிய 2.8 கிமீ நீளமுள்ள 6-வழி சுரங்கப்பாதை ஒரு முக்கிய அங்கமாகும்இந்தத் திட்டங்கள் தம்தாரியில் உள்ள அரிசி ஆலைகளுக்கும்காங்கரில் பாக்சைட் நிறைந்த பகுதிகளுக்கும் சிறந்த போக்குவரத்தை வழங்குவதோடுகொண்டகானில் உள்ள கைவினைத் தொழிலுக்கும் பயனளிக்கும்ஒட்டுமொத்தமாகஇந்தத் திட்டங்கள் இப்பகுதியின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் வளர்ச்சிக்குப் பங்களிக்கும்.

 

ரூ.750 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ராய்ப்பூர் - காரியார் இடையிலான  103 கிமீ நீளமுள்ள இரட்டை ரயில் பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்இது சத்தீஸ்கரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நிலக்கரிஎஃகுஉரங்கள் மற்றும் பிற பொருட்களை துறைமுகங்களில் இருந்து கொண்டு செல்வதை எளிதாக்கும்ரூ.290 கோடி செலவில் உருவாக்கப்பட்ட கியோட்டி - அன்டகரை இணைக்கும் 17 கி.மீநீளமுள்ள புதிய ரயில் பாதையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்புதிய ரயில் பாதையானது பிலாய் எஃகு ஆலைக்கு டல்லி ராஜ்ஹாரா மற்றும் ரோகாட் பகுதிகளிலுள்ள இரும்புத் தாது சுரங்கங்களுடன் இணைப்பை வழங்குவதோடும் தெற்கு சத்தீஸ்கரின் அடர்ந்த காடுகளின் வழியாக செல்லும் பகுதிகளையும் இணைக்கும்.

 

கோர்பாவில் ரூ.130 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டஆண்டுக்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்மேலும்காணொலி காட்சி மூலம் அந்தகர் - ராய்பூர் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 75 லட்சம் அட்டைகள் விநியோகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
₹50,000 cr infrastructure investment drives Varanasi's industrial growth

Media Coverage

₹50,000 cr infrastructure investment drives Varanasi's industrial growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam emphasizing on discipline and control over mind to achieve ultimate goal
July 01, 2026

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam:

“विज्ञानसारथिर्यस्तु मनःप्रग्रहवान्नरः।

सोऽध्वनः पारमाप्नोति तद्विष्णोः परमं पदम्॥"

The Subhashitam emphasizes that the person whose discerning intellect act as a vigilant, scientific charioteer, and whose mind is disciplined and controlled, navigates beyond the complexities of life’s path to reach the ultimate goal.

Shri Modi also remarked that the success of 11 years of Digital India has given India a new identity worldwide. This reveals the resolve of the countrymen to take the nation to new heights by embracing innovation and technology.

The Prime Minister wrote on X;

डिजिटल इंडिया के 11 वर्षों की सफलता से भारतवर्ष को दुनियाभर में एक नई पहचान मिली है। इससे इनोवेशन और टेक्नोलॉजी को अपनाकर देश को नई ऊंचाइयों पर ले जाने की देशवासियों की संकल्पशक्ति का पता चलता है।

विज्ञानसारथिर्यस्तु मनःप्रग्रहवान्नरः।

सोऽध्वनः पारमाप्नोति तद्विष्णोः परमं पदम्॥

#11YearsOfDigitalIndia