காலை நேரம் புத்துணர்வுடன் தொடங்கும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சுப்ரபாதம் ஒளிபரப்பப்படுவதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய வாழ்வியல் முறைகளுடன் தொடர்புடைய யோகா முதல் பல்வேறு விதமான கருப்பொருள்களுடன் கூடிய பன்முகத்தன்மை கொண்ட நிகழ்ச்சிகளை இந்த தொலைக்காட்சி தொகுத்து வழங்குகிறது.
இந்தியாவில் ஆழமாக வேரூன்றியுள்ள பாரம்பரியம் மற்றும் மதிப்புமிக்க மரபுகளுடன் ஞானம், உத்வேகம் மற்றும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை தனித்துவமிக்க வகையில் தொகுத்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருவதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமஸ்கிருத மொழியில் சுப்ரபாத நிகழ்ச்சி சிறப்பு பகுதியாக கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவிடும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்த சுப்ரபாதம் ஸ்லோகத்தை நேயர்களுடன் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பிரத்யேக பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=vNPCnjgSBqU”
दूरदर्शन पर प्रसारित होने वाला सुप्रभातम् कार्यक्रम सुबह-सुबह ताजगी भरा एहसास देता है। इसमें योग से लेकर भारतीय जीवन शैली तक अलग-अलग पहलुओं पर चर्चा होती है। भारतीय परंपराओं और मूल्यों पर आधारित यह कार्यक्रम ज्ञान, प्रेरणा और सकारात्मकता का अद्भुत संगम है।…
— Narendra Modi (@narendramodi) December 8, 2025
“सुप्रभातम् कार्यक्रम में एक विशेष हिस्से की ओर आपका ध्यान आकर्षित करना चाहूंगा। यह है संस्कृत सुभाषित। इसके माध्यम से भारतीय संस्कृति और विरासत को लेकर एक नई चेतना का संचार होता है। यह है आज का सुभाषित…”
सुप्रभातम् कार्यक्रम में एक विशेष हिस्से की ओर आपका ध्यान आकर्षित करना चाहूंगा। यह है संस्कृत सुभाषित। इसके माध्यम से भारतीय संस्कृति और विरासत को लेकर एक नई चेतना का संचार होता है। यह है आज का सुभाषित… pic.twitter.com/cuFYmWHQIh
— Narendra Modi (@narendramodi) December 8, 2025


