பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தை செயல்படுத்தியதற்காகவும், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் அட்டைகளை விநியோகிக்கத் தொடங்கி உள்ளதற்காகவும் தில்லி அரசுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தில்லி முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிலுக்குப் பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
"தில்லியின் சுகாதாரத் துறையின் ஒரு புரட்சிகர நடவடிக்கை! இரட்டை என்ஜின் அரசின் இந்த இயக்கம் இங்குள்ள லட்சக்கணக்கான எனது சகோதர, சகோதரிகளுக்கு மிகவும் பயனளிக்கப் போகிறது. தில்லி மக்களும் இப்போது ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”.
दिल्ली के हेल्थ सेक्टर से जुड़ा एक क्रांतिकारी कदम! डबल इंजन सरकार का यह मिशन यहां के मेरे लाखों भाई-बहनों के लिए बेहद फायदेमंद होने वाला है। मुझे बहुत खुशी है कि दिल्लीवासी भी अब आयुष्मान योजना के तहत अपना इलाज करा पाएंगे। https://t.co/8QjzdBqcNe
— Narendra Modi (@narendramodi) April 11, 2025


