பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் பற்றிய, அனைவருக்கும் வளர்ச்சி குறித்த மாபெரும் வினாடி-வினா போட்டியில் பங்கேற்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் திரு.நரேந்திரமோடி, இந்த வினாடி-வினா போட்டி ஆர்வத்தைத் தூண்டக் கூடியது என்றும், நல்லாட்சி குறித்த பல்வேறு முன்முயற்சிகள் இதில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
மை கவ் இந்தியா வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்திக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;
“இது, ஆர்வத்தைத் தூண்டக் கூடியது, நல்லாட்சி குறித்த பல்வேறு முன்முயற்சிகள் இதில் இடம்பெறும்.
அனைவருக்கும் வளர்ச்சி குறித்த இந்த மாபெரும் வினாடி-வினா போட்டியில் பங்கேற்று, உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய நமது கூட்டு பேரார்வத்தை வலுப்படுத்துங்கள்“ என்று தெரிவித்துள்ளார்.
This is an interesting quiz which will cover a series of good governance initiatives.
— Narendra Modi (@narendramodi) April 14, 2022
Do take part in the #SabkaVikasMahaQuiz and strengthen our collective quest towards inclusive development. https://t.co/t50ODAlMua


