பிப்ரவரி 6 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள தேர்வு குறித்த உரையாடல் 26-ல் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தேர்வு தொடர்பாக மிக ஆர்வமிக்க தலைப்புகள் இடம் பெறும் என்றும் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கற்பதில் கவனம் செலுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியை தாம் எப்போதும் விரும்புவதாகவும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் பரந்த மனப்பான்மையுடன் உரையாட தமக்கு வாய்ப்புக் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
“நாளை பிப்ரவரி 6 அன்று காலை 10 மணி அளவில் தேர்வு குறித்த உரையாடல் 26 நிகழ்ச்சியைக் காணவும். இந்த ஆண்டு நடைபெறும் தேர்வு குறித்த உரையாடலில் தேர்வு தொடர்பாக மிக ஆர்வமிக்க தலைப்புகள் இடம் பெறும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கற்பதில் கவனம் செலுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சியை நான் எப்போதும் விரும்புகிறேன். நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் பரந்த மனப்பான்மையுடன் உரையாட எனக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.
Do watch #ParikshaPeCharcha26 tomorrow, 6th February at 10 AM. This year’s PPC features very interesting topics relating to examinations, notably the need to remain stress free, focus on learning and more. This is a platform I’ve always enjoyed, as it gives me an opportunity to…
— Narendra Modi (@narendramodi) February 5, 2026


