கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று (2025 ஜூன் 17) நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தினார். உலகளாவிய தென்பகுதி நாடுகளின் இலக்குகளை அடைவதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.
பிரேசில் அதிபர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசா, பிரேசில் அதிபர் லுலா ஆகிய இரு அன்பான நண்பர்களுடன் சிறப்பான உரையாடல்களை மேற்கொண்டேன். உலகளாவிய தென்பகுதி நாடுகளின் முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். நல்ல மாற்றங்களை உருவாக்குவதை நோக்கி செயல்படுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்..."
O Sul Global se faz presente no G7. Encontro com @CyrilRamaphosa 🇿🇦 e @narendramodi 🇮🇳
— Lula (@LulaOficial) June 17, 2025
📸 @ricardostuckert pic.twitter.com/puPsEMWix2


