புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

புதிய கண்டுபிடிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் இருப்பது, செயற்கை நுண்ணறிவு, இந்தியர்களின் திறமை மற்றும் புத்தாக்கத்தின் பாராட்டத்தக்க திறனை எடுத்துக்காட்டுவதாக திரு மோடி குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றம், நாட்டின் மாற்றகரமான தீர்வுகளை வடிவமைப்பதுடன், உலகளாவிய வளர்ச்சியிலும் பங்களிப்பதாக அவர் தெரிவித்தார்.






இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியதாவது:
“பாரத மண்டபத்தில், இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தேன்.
புதிய கண்டுபிடிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே இங்கு இருப்பது, செயற்கை நுண்ணறிவு, இந்தியாவின் திறமைகள் மற்றும் புத்தாக்கத்தின் தனித்துவம் வாய்ந்த திறனுக்கு உதாரணமாக விளங்குகிறது. நாம் அனைவரும் இணைந்து இந்தியாவிற்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகிற்கும் தேவையான தீர்வுகளை வடிவமைப்போம்.”
Inaugurated the India AI Impact Expo 2026 at Bharat Mandapam.
— Narendra Modi (@narendramodi) February 16, 2026
Being here among innovators, researchers and tech enthusiasts gives a glimpse of the extraordinary potential of AI, Indian talent and innovation. Together, we will shape solutions not just for India but for the… pic.twitter.com/G370iXYAXm


