பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, இந்தியாவின் நிதி கட்டமைப்பையும் உலகளாவிய நிலையையும் மாற்றியமைத்த, மத்திய அரசின் ஒரு தசாப்த கால துணிச்சலான பொருளாதார சீர்திருத்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டினார். முதலீட்டை ஊக்குவித்த பெரு நிறுவனங்கள் வரி குறைப்பிலிருந்து, தேசிய சந்தையை ஒருங்கிணைத்த ஜிஎஸ்டி அமலாக்கம், மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் வரை, இந்தச் சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாகவும், மக்கள் மையமாகவும் இருந்துள்ளன.
வரி அமைப்புகளை எளிதாக்குதல், வரி விகிதங்களைச் சீரமைத்தல் மற்றும் ஜிஎஸ்டி அமைப்பை மேலும் சமமாகவும், வளர்ச்சி நோக்குடனும் மாற்றுவதன் மூலம் இந்த பயணத்தைத் தொடரும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி (#NextGenGST) சீர்திருத்தங்களின் சமீபத்திய மாற்றத்தை அவர் பாராட்டினார். இந்த நடவடிக்கைகள், இந்தியாவின் வலிமையான நிதி ஒழுங்கு வலுப்பெறுகின்றன. இது உலக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தி, நாட்டின் கடன் தரமதிப்பீடுகளை மேம்படுத்தியுள்ளது என அவர் கூறினார்.
திரு விஜய் என்பவரின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர் திரு நரேந்திர மோடி:
"கடந்த தசாப்தம், இந்தியாவின் பொருளாதார நிலையை மாற்றியமைக்கும் துணிச்சலான சீர்திருத்தங்களைப் பற்றியது. முதலீட்டைத் தூண்டிய பெரு நிறுவனங்களின் வரி குறைப்பு முதல், ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்கிய ஜிஎஸ்டி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் வரை இவை அடங்கும்.
அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி (#NextGenGST) சீர்திருத்தங்கள் இந்த பயணத்தைத் தொடர்கின்றன. இது வரி அமைப்பை எளிமையாகவும், நேர்மையாகவும், மேலும் வளர்ச்சி நோக்குடனும் மாற்றுகிறது. அதே நேரத்தில், நமது நிதி ஒழுங்கு உலகளாவிய நம்பிக்கையையும் சிறந்த கடன் மதிப்பீடுகளையும் பெற்றுள்ளது.
இந்த முயற்சிகள் மூலம், நாம் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறோம்."
We are lucky to have witnessed Finance history in last 5-10 yrs - Corp Tax reduction, GST intro and #NextGenGSTReforms along with Personal Income Tax Changes and moving to New Tax Regime and higher exemption slabs , Rating improvements by keeping Fiscal deficit in control pic.twitter.com/iFaLRJZTvH
— Vijay (@centerofright) September 3, 2025


