"உத்தராகண்ட் மாநிலம் நிறுவப்பட்டதன் 25-ம் ஆண்டு நிறைவையொட்டி, அந்த மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இயற்கையின் மடியில் அமைந்திருக்கும் இந்த தெய்வீக பூமி, சுற்றுலாவோடு அனைத்துத் துறைகளிலும் புதிய முன்னேற்றத்தைப் பெற்று வருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ்தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"உத்தராகண்ட் மாநிலம் நிறுவப்பட்டதன் 25-ம் ஆண்டு நிறைவையொட்டி, அம்மாநிலத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இயற்கையின் மடியில் அமைந்திருக்கும் இந்த தெய்வீக பூமி, சுற்றுலா உட்பட அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தின் புதிய வேகத்தை இப்போது பெற்று வருகிறது. இந்த சிறப்பான நாளில், இங்குள்ள பணிவு மிகுந்த, கடின உழைப்பு கொண்ட மக்கள், மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெற்று வாழ வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்."
उत्तराखंड की स्थापना की 25वीं वर्षगांठ पर राज्य के मेरे सभी भाई-बहनों को अनेकानेक शुभकामनाएं। प्रकृति की गोद में बसी हमारी यह देवभूमि आज पर्यटन के साथ-साथ हर क्षेत्र में प्रगति की नई रफ्तार भर रही है। प्रदेश के इस विशेष अवसर पर मैं यहां के विनम्र, कर्मठ और देवतुल्य लोगों की…
— Narendra Modi (@narendramodi) November 9, 2025


