கேரள மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் வசிக்கும் மக்கள் உலகளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். அவர்களின் படைப்பாற்றல் திறன் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்காக நன்மதிப்பை பெற்றவர்கள் என்றும், திரு மோடி கூறினார். மாநிலத்தின் இயற்கை அழகு கொண்ட நிலப்பரப்புகளும், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமும், இந்தியாவின் சிறந்த கலாச்சார மாண்புகளைப் பிரதிபலிப்பதாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். கேரள மாநில மக்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், தொடர் வெற்றிகளையும் பெற பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“கேரள மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! உலகளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இம்மாநில மக்கள், படைப்பாற்றல் திறன் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்காக தங்களை வேறுபடுத்திக் கொண்ட மாநிலம் இது. இம்மாநிலத்தின் அழகிய நிலப்பரப்புகளும், பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பாரம்பரியமும், இந்தியாவின் சிறப்பான கலாச்சார மாண்புகளை பிரதிபலிக்கின்றன. கேரள மாநில மக்கள் எப்போதும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், வெற்றியையும் பெற வாழ்த்துகிறேன்.”
Warm wishes on Kerala Piravi! This is a state whose people have been excelling in diverse sectors globally and have distinguished themselves for their creativity as well as innovation. The state’s scenic landscapes and centuries-old heritage reflect India’s vibrant cultural…
— Narendra Modi (@narendramodi) November 1, 2025
“കേരളപ്പിറവി ദിനത്തിൽ ഏവർക്കും ഊഷ്മളമായ ആശംസകൾ! ആഗോളതലത്തിൽ വൈവിധ്യമാർന്ന മേഖലകളിൽ മികവ് പുലർത്തുന്നവരും, സർഗ്ഗാത്മകതയ്ക്കും നൂതനാശയങ്ങൾക്കും പേരുകേട്ടവരുമായ ജനതയുൾക്കൊള്ളുന്ന സംസ്ഥാനമാണിത്. ഈ സംസ്ഥാനത്തിന്റെ മനോഹരമായ ഭൂപ്രകൃതിയും നൂറ്റാണ്ടുകൾ പഴക്കമുള്ള പൈതൃകവും ഇന്ത്യയുടെ ഊർജസ്വലമായ സാംസ്കാരിക പ്രൗഢി പ്രതിഫലിപ്പിക്കുന്നു. കേരളത്തിലെ ജനങ്ങൾക്ക് എല്ലായ്പ്പോഴും മെച്ചപ്പെട്ട ആരോഗ്യവും വിജയവും കൈവരട്ടെ.”
കേരളപ്പിറവി ദിനത്തിൽ ഏവർക്കും ഊഷ്മളമായ ആശംസകൾ! ആഗോളതലത്തിൽ വൈവിധ്യമാർന്ന മേഖലകളിൽ മികവ് പുലർത്തുന്നവരും, സർഗ്ഗാത്മകതയ്ക്കും നൂതനാശയങ്ങൾക്കും പേരുകേട്ടവരുമായ ജനതയുൾക്കൊള്ളുന്ന സംസ്ഥാനമാണിത്. ഈ സംസ്ഥാനത്തിന്റെ മനോഹരമായ ഭൂപ്രകൃതിയും നൂറ്റാണ്ടുകൾ പഴക്കമുള്ള പൈതൃകവും ഇന്ത്യയുടെ…
— Narendra Modi (@narendramodi) November 1, 2025


