ஹரியானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் அயராத கடின உழைப்பு, படை வீரர்களின் இணையற்ற வீரம், இளைஞர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மூலம் ஹரியானா மாநிலம் எப்போதும் தேசத்திற்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று திரு. மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சிப் பாதையில் விரைவான முன்னேற்றம் கண்டு வரும் இம்மாநிலத்தின் அனைத்து குடிமக்களின் மகிழ்ச்சி மற்றும் பிரகாசமான எதிர்காலத்திற்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
"ஹரியானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, அம்மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நமது விவசாய சகோதர சகோதரிகளின் அயராத கடின உழைப்பு, நமது வீரர்களின் ஒப்பற்ற வீரம், நமது இளைஞர்களின் அற்புதமான செயல்திறன் ஆகியவற்றின் மூலம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிலம் முழு நாட்டிற்கும் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இந்த சிறப்புமிக்க தருணத்தில், இம்மாநிலம் முன்னேற்றப் பாதையில் விரைவான முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பிரகாசமான எதிர்காலமும் அமையவும் வாழ்த்துகிறேன்."
हरियाणा दिवस के अवसर पर राज्य के सभी निवासियों को बहुत-बहुत बधाई। यह ऐतिहासिक धरती हमारे किसान भाई-बहनों के अथक परिश्रम, जवानों के अतुलनीय पराक्रम और युवाओं के अद्भुत प्रदर्शन से देशभर के लिए एक मिसाल रही है। प्रगति के पथ पर तेजी से आगे बढ़ रहे इस प्रदेश के विशेष अवसर पर मैं हर…
— Narendra Modi (@narendramodi) November 1, 2025


