PM announces ex-gratia from PMNRF

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் நேரிட்ட விபத்து குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் நேரிட்ட விபத்து குறித்த செய்தி அறிந்து ஆழ்ந்த மனவேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக  தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். : பிரதமர் நரேந்திர மோடி"

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
But where is India’s economic growth?

Media Coverage

But where is India’s economic growth?
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares moments from his metro journey to and from the SRCC programme
September 05, 2026

Prime Minister Shri Narendra Modi today shared glimpses of his metro journey while traveling to and from the SRCC programme.

In a post on X, the Prime Minister shared:

"Metro moments…

On the way to the SRCC programme and back."