புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று லே-யில் நடைபெற்ற ‘ததாகதரின் புனிதப் பொருட்களின் கண்காட்சி’யின் தொடக்க விழா குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கபிலவஸ்துவில் உள்ள பிப்ரவா தூபியுடன் தொடர்புடையதும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டதுமான இந்தப் புனிதப் பொருட்கள், புத்த பகவானின் அழியாத போதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தக் கண்காட்சி, மே 14 வரை நடைபெறும் என்பதையும், வரும் நாட்களில் ஜான்ஸ்கர் பகுதிக்கும் செல்லும் என்பதையும் சுட்டிக்காட்டி, லடாக் முழுவதிலும் உள்ள மக்கள் மரியாதை செலுத்துவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்று திரு மோடி கூறினார். மேலும், இது லடாக்கில் ஆன்மீக மற்றும் கலாச்சார சுற்றுலாவையும் மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“நேற்று, புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, லே-யில் ‘ததாகதரின் புனிதப் பொருட்களின் கண்காட்சி’ திறந்து வைக்கப்பட்டது, மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். கபிலவஸ்துவில் உள்ள பிப்ரவா தூபியுடன் தொடர்புடைய இந்தப் போற்றப்படும் புனிதப் பொருட்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டன. அவை புத்த பகவானின் அழியாத போதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன.
இந்தக் கண்காட்சி, மே 14-ஆம் தேதி வரை நடைபெறும். வரும் நாட்களில், இது ஜான்ஸ்கர் பகுதிக்கும் செல்லும். லடாக் முழுவதிலும் உள்ள மக்கள் தங்கள் மரியாதையைச் செலுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. மேலும், இது லடாக்கில் ஆன்மீக மற்றும் கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்தும்.”
It is a matter of immense delight that yesterday, on the occasion of Buddha Purnima, the ‘Sacred Exposition of the Holy Relics of the Tathagata’ was inaugurated in Leh. These revered relics are linked to the Piprahwa Stupa in Kapilavastu and were excavated in the closing years of… pic.twitter.com/tYsK5GKQ45
— Narendra Modi (@narendramodi) May 2, 2026


