நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்தின் பின்னணியில் ஊக்க சக்தியாக நீடிக்கும் இந்தியாவின் நடுத்தர வகுப்பிற்கு ஆதரவளிக்கும் அரசின் தீவிரமான உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
தொடர்ச்சியான வரலாற்றுச் சிறப்புமிக்க வருமான வரி குறைப்புகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தொலைக்காட்சிகள், குளிரூட்டிகள் மற்றும் இதர அன்றாட வீட்டு உபயோகப் பொருட்களை இலக்காகக் கொண்டு, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், இத்தகைய சாதனங்களை லட்சக்கணக்கான குடும்பங்கள் அணுக வழிவகை செய்துள்ளது.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் திரு சுனில் வசானி தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் கடின உழைப்பாளிகளான நடுத்தர வகுப்பினர்தான் எங்களது வளர்ச்சிப் பயணத்தில் மையமாக இருக்கிறார்கள்.
வரலாற்றுச் சிறப்புமிக்க வருமான வரி குறைப்புகள் மற்றும் தொலைக்காட்சிகள், குளிரூட்டிகள் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களை இப்போது அணுகக் கூடியதாக மாற்றியிருக்கும் சமீபத்திய அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் வாயிலாக, கோடிக்கணக்கான குடும்பங்களின் விருப்பங்களுக்கு ஆதரவளித்து, அவர்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதிபூண்டிருக்கிறோம்.”
India’s hardworking middle class is at the heart of our growth journey.
— Narendra Modi (@narendramodi) September 4, 2025
Through historic income tax cuts and now #NextGenGST reforms that make products like TVs, ACs and everyday essentials more affordable, we are committed to enhancing ease of living and supporting the… https://t.co/6xmHmZIuTm


