கடல்சார் இணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு ரோடோல்ஃப் சாடேவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
கப்பல் கட்டுமானம், கொள்கலன் உற்பத்தி, கடல்சார் டிஜிட்டல் புத்தாக்கம், தளவாடங்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் கூடுதல் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான வழிகள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவின் விரிவடைந்து வரும் துறைமுக உட்கட்டமைப்பு, உலகளாவிய கடல்சார் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரிய வாய்ப்புகளை வழங்குகிறது என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், திரு மோடி கூறியதாவது:
"சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த திரு ரோடால்ஃப் சாடே உடன் கடல்சார் இணைப்பு, உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் போக்குகள் மற்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் கடல்சார் துறையில் உருவாகி வரும் வாய்ப்புகள் குறித்து ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டேன்."
கப்பல் கட்டுமானம், கொள்கலன் உற்பத்தி, டிஜிட்டல் கடல்சார் புத்தாக்கம், தளவாடங்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் அதிக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தேன்.
இந்தியாவின் விரிவடைந்து வரும் துறைமுக உட்கட்டமைப்பு, உலகளாவிய கடல்சார் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரிய வாய்ப்புகளை வழங்குகிறது.
@cmacgm”
Had a fruitful discussion with Mr. Rodolphe Saadé of CMA CGM on maritime connectivity, global shipping trends and emerging opportunities in India’s rapidly growing maritime sector.
— Narendra Modi (@narendramodi) June 18, 2026
Discussed avenues for greater collaboration in shipbuilding, container manufacturing, digital… pic.twitter.com/k3vrCH3IiD


