ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எச்.6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிவராஜன் மற்றும் நித்யா ஸ்ரீ சிவனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அவர்களின் சாதனை அவர்களின் கடின உழைப்புக்கு சான்றாகும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் எஸ்.எச் 6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிவராஜன் மற்றும் நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
அவர்களின் ஒருங்கிணைந்த திறமை மற்றும் ஒருங்கிணைப்பு அழிக்க முடியாத முத்திரையை விட்டுச் சென்றுள்ளது. இத்தகைய மகத்தான சாதனை அவர்களின் கடின உழைப்புக்குச் சான்றாகும். அவர்களின் வெற்றியை இந்தியா எப்போதும் கொண்டாடுகிறது.”
Congratulations to @SIVARAJAN_INDIA and @07nithyasre for Bronze Medal in Badminton Mixed Doubles SH6 event at the Asian Para Games.
— Narendra Modi (@narendramodi) October 25, 2023
Their combined excellence and synergy have left an indelible mark. Such a grand achievement is testimony to their hard work. India always… pic.twitter.com/7XTMF33JxH


