பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் மகளிர் ஜூடோ பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுஷிலா தேவி லிக்மாபமிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“சுஷிலா தேவி லிக்மாபமின் அபாரமான செயல்திறனால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். பாராட்டுக்குரிய திறனையும், நெகிழ்தன்மையையும் அவர் வெளிப்படுத்தினார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”
Elated by the exceptional performance by Shushila Devi Likmabam. Congratulations to her on winning the Silver medal. She has demonstrated remarkable skill and resilience. Best wishes for her future endeavours. pic.twitter.com/fZ5t49WjKV
— Narendra Modi (@narendramodi) August 1, 2022


