ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியடைந்த சனா டக்காய்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – ஜப்பான் இடையேயான சிறப்புமிக்க உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மை உலக அமைதி, நிலைத்தன்மை, செழுமை ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
டக்காய்ச்சியின் தலைமைத்துவம் மூலம் இந்தியா – ஜப்பான் இடையேயான நட்புறவு தொடர்ந்து மென்மேலும் வளர்ச்சியடையும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்த சமூக ஊடக எக்ஸ் தளத்தில் எழுதியிருப்பதாவது;
“நாடாளுமன்ற தேர்தலில் உங்களுடைய சிறப்பான வெற்றிக்காக வாழ்த்துகள் சனா டக்காய்ச்சி!
நமது சிறப்புமிக்க உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மை உலக அமைதி, நிலைத்தன்மை, செழுமை ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ், இந்தியா – ஜப்பான் இடையேயான நட்புறவை நாம் தொடர்ந்து மென்மேலும் வளர்ச்சியடையச் செய்வோம் என்று நான் நம்புகிறேன்”.
Congratulations Sanae Takaichi on your landmark victory in the elections to the House of Representatives!
— Narendra Modi (@narendramodi) February 8, 2026
Our Special Strategic and Global Partnership plays a vital role in enhancing…
衆議院議員総選挙における画期的な御勝利に際し、髙市早苗閣下に心よりお祝い申し上げます。
— Narendra Modi (@narendramodi) February 8, 2026
日印特別戦略的・グローバル・パートナーシップは、世界の平和、安定及び繁栄を強化する上で、重要な役割を果たしております。…


