நேபாளத்தில் தேர்தல்கள் வெற்றிகரமாகவும் அமைதியாகவும் நடத்தப்பட்டதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாள மக்களுக்கும் அரசுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நேபாள மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார். இந்த வெற்றிகரமான தேர்தல்களை நேபாளத்தின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல் என்றும் பெருமைமிக்க தருணம் என்றும் அவர் விவரித்துள்ளார்.

நெருங்கிய நட்பு நாடாகவும் அண்டை நாடாகவும் உள்ள நேபாளத்தின் மக்களுடனும் புதிய அரசுடனும் நெருக்கமாகப் பணியாற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"தேர்தல்களை வெற்றிகரமாகவும் அமைதியாகவும் நடத்தியதற்காக நேபாள மக்களையும் அரசையும் நான் மனதார வாழ்த்துகிறேன். எனது நேபாள சகோதர, சகோதரிகள் தங்கள் ஜனநாயக உரிமைகளை மிகவும் துடிப்பாகப் பயன்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த வரலாற்று மைல்கல், நேபாளத்தின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க தருணம்.

அமைதி, முன்னேற்றம், செழிப்பு ஆகியவற்றில் புதிய உயரங்களை எட்டுவதற்காக, நெருங்கிய நடபு நாடாகவும் அண்டை நாடாகவும் உள்ள நேபாளத்தின் மக்களுடனும், புதிய அரசுடனும் இணைந்து, நெருக்கமாகப் பணியாற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது."

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's Economy Grows 7.7% in FY26, 7.8% in Q4; Beats Estimates Despite Global Turmoil

Media Coverage

India's Economy Grows 7.7% in FY26, 7.8% in Q4; Beats Estimates Despite Global Turmoil
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi congratulates people of Assam on commendable environmental feat
June 05, 2026

Prime Minister Shri Narendra Modi today extended his heartiest congratulations to the people of Assam, especially the state’s Nari Shakti, for achieving a commendable feat in environmental conservation. The Prime Minister remarked that the state's Nari Shakti has taken a lead in this significant effort, which is aimed at building a sustainable planet.

The Prime Minister posted on X:

"Commendable feat. Congratulations to the people of Assam, especially the state’s Nari Shakti for taking the lead in this effort aimed at building a sustainable planet"