பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் எனப்படும் புல்வெளி பந்து உருட்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதற்காக, இந்திய ஆடவர் அணியின் வீரர்களான சுனில் பகதூர், நவ்நீத் சிங், சந்தன் குமார் சிங் மற்றும் தினேஷ் குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"லான் பவுல்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுனில் பகதூர், நவ்நீத் சிங், சந்தன் குமார் சிங் மற்றும் தினேஷ் குமார் ஆகியோர் குறித்து பெருமிதம் கொள்கிறோம். அவர்களின் குழுப்பணியும் விடாமுயற்சியும் போற்றத்தக்கவை. அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். #Cheer4India"
Proud of Sunil Bahadur, Navneet Singh, Chandan Kumar Singh and Dinesh Kumar, who have won a Silver medal in Lawn Bowls. Their teamwork and tenacity are admirable. Best wishes to them for their future endeavours. #Cheer4India pic.twitter.com/I86wJywzrt
— Narendra Modi (@narendramodi) August 6, 2022


