செஷல்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் பேட்ரிக் ஹெர்மினிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தியப் பெருங்கடலின் நீர் இரு நாட்டு மக்களையும் இணைப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். டாக்டர் ஹெர்மினி அதிபராக இருக்கும் காலத்தில் இந்தியாவிற்கும் செஷல்ஸுக்கும் இடையிலான காலத்தால் மாறாத, பன்முகத்தன்மை கொண்ட உறவுகள் ஆழமடைந்து மேலும் உத்வேகம் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"செஷல்ஸில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் பேட்ரிக் ஹெர்மினிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியப் பெருங்கடலின் நீர்நிலைகள் நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தையும், நமது மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் இணைத்து உறவுகளை வளர்க்கின்றன. காலத்தால் மாறாத, பன்முகத்தன்மை கொண்ட உறவுகள், டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி அதிபராக இருக்கும் காலத்தில் ஆழமடைந்து மேலும் உத்வேகம் பெறும் என்று நான் நம்புகிறேன். வரவிருக்கும் அவரது பதவிக்காலத்திற்கு எனது வாழ்த்துகள்."
Heartiest congratulations to Dr. Patrick Herminie on his victory in the Presidential Elections in Seychelles. The waters of the Indian Ocean are our shared heritage and nourish the aspirations and needs of our people. I am confident that our time-tested and multi-faceted…
— Narendra Modi (@narendramodi) October 12, 2025


