டாக்காவில் நிகழ்ந்த ஒரு துயரமான விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களில் பலர் இளம் மாணவர்கள் என்று குறிப்பிட்டதுடன், வங்கதேசத்துடன் இந்தியா ஒற்றுமையாக இருப்பதாகவும், சாத்தியமான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியதாவது:
“டாக்காவில் நிகழ்ந்த ஒரு கோரமான விமான விபத்தில் ஏராளமான இளம் மாணவர்களாவர் உட்பட பலர் உயிரிழந்ததை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். இந்தியா வங்கதேசத்துடன் ஒற்றுமையாக உள்ளது , மேலும் சாத்தியமான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்கத் தயாராக உள்ளது.”
Deeply shocked and saddened at the loss of lives, many of them young students, in a tragic air crash in Dhaka. Our hearts go out to the bereaved families. We pray for the swift recovery of those injured. India stands in solidarity with Bangladesh and is ready to extend all…
— Narendra Modi (@narendramodi) July 21, 2025


