புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரும் சிந்தனையாளருமான திரு எஸ்.எல். பைரப்பாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். தேசத்தின் சமூக சிந்தனையைத் தூண்டி, இந்தியப் பண்பாட்டின் ஆழத்தை வெளிப்படுத்திய ஒரு மாபெரும் ஆளுமை என அவரைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இலக்கியத்திற்கு, குறிப்பாக கன்னட மொழிக்கு திரு பைரப்பா ஆற்றிய பங்களிப்புகள், நாட்டின் அறிவுசார் மற்றும் கலாச்சாரத் தளத்தில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளன. வரலாறு, தத்துவம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த அவரது அச்சமற்ற ஈடுபாடு, தலைமுறைகளையும் எல்லைகளையும் கடந்து அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தனது சமூக ஊடக எக்ஸ் பதிவில், கூறியிருப்பதாவது,

“திரு எஸ்.எல். பைரப்பா அவர்களின் மறைவால், தேசத்தின் சமூக சிந்தனையைத் தூண்டி, இந்தியப் பண்பாட்டின் ஆழத்தை வெளிப்படுத்திய ஒரு மாபெரும் ஆளுமையை நாம் இழந்துவிட்டோம். அச்சமற்ற மற்றும் காலத்தால் அழியாத சிந்தனையாளரான அவர், தனது சிந்தனையைத் தூண்டும் படைப்புகளால் கன்னட இலக்கியத்தை மிகவும் செழுமைப்படுத்தி னார். அவரது எழுத்துக்கள், சமூகத்துடன் ஆழமாகச் சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும், செயல்படவும் தலைமுறைகளைத் தூண்டின.

நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீதான அவரது அசைக்க முடியாத ஆர்வம், வரும் ஆண்டுகளிலும் பலரது எண்ணங்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”

 

ಶ್ರೀ ಎಸ್.ಎಲ್. ಭೈರಪ್ಪ ಅವರ ನಿಧನದೊಂದಿಗೆ, ನಮ್ಮ ಆತ್ಮಸಾಕ್ಷಿಯನ್ನು ಕದಲಿಸಿದ ಮತ್ತು ಭಾರತದ ಆತ್ಮವನ್ನು ಮುಟ್ಟಿದ ಒಬ್ಬ ಧೀಮಂತ ವ್ಯಕಿತ್ವವನ್ನು ನಾವು ಕಳೆದುಕೊಂಡಿದ್ದೇವೆ. ನಿರ್ಭೀತ ಮತ್ತು ಕಾಲಾತೀತ ಚಿಂತಕರಾಗಿದ್ದ ಅವರು, ತಮ್ಮ ಚಿಂತನಶೀಲ ಕೃತಿಗಳಿಂದ ಕನ್ನಡ ಸಾಹಿತ್ಯವನ್ನು ಶ್ರೀಮಂತಗೊಳಿಸಿದ್ದಾರೆ. ಅವರ ಬರಹಗಳು ಪೀಳಿಗೆಗಳನ್ನು ಚಿಂತಿಸಲು, ಪ್ರಶ್ನಿಸಲು ಮತ್ತು ಸಮಾಜದೊಂದಿಗೆ ಹೆಚ್ಚು ಆಳವಾಗಿ ತೊಡಗಿಸಿಕೊಳ್ಳಲು ಪ್ರೇರೇಪಿಸಿದವು. ನಮ್ಮ ಇತಿಹಾಸ ಮತ್ತು ಸಂಸ್ಕೃತಿಯ ಬಗ್ಗೆ ಅವರ ಅಚಲವಾದ ಉತ್ಸಾಹವು ಮುಂದಿನ ದಿನಗಳಲ್ಲೂ ಜನರನ್ನು ಪ್ರೇರೇಪಿಸುತ್ತಲೇ ಇರುತ್ತದೆ. ಈ ದುಃಖದ ಸಮಯದಲ್ಲಿ ಅವರ ಕುಟುಂಬ ಮತ್ತು ಅಭಿಮಾನಿಗಳಿಗೆ ನನ್ನ ಸಂತಾಪಗಳು. ಓಂ ಶಾಂತಿ. 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model

Media Coverage

IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 13, 2026
June 13, 2026

Viksit Bharat Accelerating: Tech, Defense, Infra & Exports Power India's Global Leap Under the Leadership of PM Modi