ஷில்லாங் தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் ரிக்கி ஏ.ஜே. சிங்கான் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஷில்லாங் தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் டாக்டர் ரிக்கி ஏ.ஜே. சிங்கான் மறைவால் வருத்தமடைந்தேன். மேகாலயா மக்களுக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக அவர் நினைவுகூரப்படுவார். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன."
Saddened by the passing of Lok Sabha MP from Shillong, Dr. Ricky AJ Syngkon. He will be remembered for his dedicated service to the people of Meghalaya. My thoughts are with his family, friends and supporters during this difficult time. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) February 20, 2026


